Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Amaran Team: அமரன் பட திரையிடல்… சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட அமரன் படக்குழு!

Amaran Film Crew Shines At IFFI: தமிழ் சினிமாவில் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதியில் வெளியாகி, பான் இந்திய வரவேற்பை பெற்ற படம்தான் அமரன். இப்படமானது வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், நடைபெற்றுவரும் 56வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக இப்படக்குழு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

Amaran Team: அமரன் பட திரையிடல்… சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட அமரன் படக்குழு!
அமரன் படக்குழுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Nov 2025 17:00 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) மற்றும் சாய் பல்லவியின் (Sai Pallavi) பிரம்மாதமான நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான திரைப்படம்தான் அமரன் (Amaran). இந்த திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periyasami) இயக்க, உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan) தயாரித்திருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த படமானது மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தில் அவரின் கதாபாத்திரத்தை போலவே அவரின் மனைவியான இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரமும் அருமையாகவே காட்டப்பட்டிருந்தது. இதில் ராணுவ வீரனாக சிவகார்த்திகேயன் மற்றும் இந்து ரெபேக்கா வர்கீசாக் நடிகை சாய் பல்லவியும் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்திருந்தார். இந்நிலையில் இப்படமானது கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) திரையிடப்படுவதாக முன்னனதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி போன்றவர்கள் நேற்று 2025 நவம்பர் 20ம் தேதியில் சென்னையிலிருந்து புறப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று 2025 வநவம்பர் 21 ஆம் தேதியில் அந்த நிகழ்ச்சியில் இவர்கள் கலந்துகொண்டது தொடர்பான புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ரவி மோகனின் படத்திற்கு ப்ரோ கோட் பெயரை பயன்படுத்த விதித்த தடை நீட்டிப்பு!

56வது சர்வதேச திரைப்பட விழாவில் அமரன் படக்குழு

இந்த அமரன் திரைப்படம் வெளியாகியிருந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டில் பல்வேறு விருதுகள் இப்படத்திற்கு கிடைத்திருந்தது. மேலும் இந்த படத்தை பல்வேறு நட்சத்திர நடிகர்களும் பாராட்டியிருந்தனர். அந்த வகையில் 56வது சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் பீனிக்ஸ் விருது இப்படத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஹீரோவாக கவின்.. வில்லியாக ஆண்ட்ரியா.. மாஸ்க் படம் எப்படி இருக்கு – எக்ஸ் விமர்சனம் இதோ

மேலும் இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் மற்றும் கமல்ஹாசன் பேசியது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை சாய் பல்லவி பேசியது தொடர்பான வீடியோ பதிவு :

இந்த 2025ம் ஆண்டில்  தமிழ் சினிமாவில் இருந்து அமரன் என்ற பிரம்மாண்ட படம்தான், சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்திற்கு நிச்சயமாக சர்வதேச அங்கிகாரம் கிடைக்கும் என சாய் பல்லவி மற்றும் சிவகாத்திகேயன் ரசிகர்கள் எதிர்பாத்துவருகின்றனர்.