சர்வதேச திரைப்பட விழாவில் அமரன்.. கோவாவுக்கு செல்லும் சிவகார்த்திகேயன்- சாய் பல்லவி.. வைரலாகும் வீடியோ!
IFFI 2025: கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்த திரைப்படம்தான் அமரன். இந்த படத்தின் வெற்றியை முன்னிட்டு, 2025ம் ஆண்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி இன்று நடைபெறும் நிலையில், அங்கு அமரன் படக்குழு சென்றுள்ளனர். இது தொடர்ப்பன வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழில் பிரபல நாயகனாக இருப்பவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 23 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் SK22 என அறிவிக்கப்பட்டு வெளியான திரைப்படம்தான் அமரன் (Amaran). இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periyasamy) இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி (Sai pallavi) நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம்தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது என்றே கூறலாம். அந்த வகையில் இப்படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் (Kamal Haasan) , ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார். இப்படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்த நிலையில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த படம் கடந்த 2024ம் ஆண்டில் அக்டோபர் இறுதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இந்த படமானது பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், நடிகர்கள் சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு சிறப்பு விருதுகளும் கிடைத்திருந்தது. அந்த வகையில் 2025ம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் (International film festival of india) இப்படம் திரையிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று 2025 நவம்பர் 20ம் தேதியில் இந்நிகழ்ச்சி கோவாவில் (Goa) நடைபெறும் நிலையில், படக்குழு விமானம் மூலமாக புறப்பட்டுச்சென்றனர். இது தொடர்பான வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: மாஸ்க் மக்களுக்கான படம்.. நிச்சயமாக எல்லோருக்கும் புடிக்கும்- கவின் வெளியிட்ட வீடியோ வைரல்!
சர்வதேச திரைப்பட விழாவில் சாய் பல்லவி கலந்துகொள்வது தொடர்பான வீடியோ பதிவு :
Sai Pallavi and Sivakarthikeyan takeoff to Goa to attend @iffigoa festival✈️😍#SaiPallavi#Sivakarthikeyan pic.twitter.com/8HLWjnZ1yw
— Sai PallaviFan_Boy (@PVAniruddh) November 20, 2025
அமரன் படத்திற்கு விருது கிடைக்குமா?
இந்த அமரன் படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்த நிலையில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதில் முக்கியமாக நடிகை சாய் பல்லவியின் நடிப்பு பேசப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு தமிழகத்தில் சார்பில் பல விருதுகள் பெற்றருந்தாலும், சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுவது பெரும் சாதனைதான். மேலும் இந்த விழாவின் போது இந்தியன் பனோரமா இப்படத்திற்கு விருதை கொடுக்கவுள்ளது.
இதையும் படிங்க: எத்தனை படம் பண்ணாலும் என்னால் அந்த அடையாளத்தை மாற்ற முடியல- கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
மேலும் இந்த படத்திற்கு சர்வதேச விருது கிடைக்குமா என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளவுள்ளனர். விருதுகள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.