ரிலீஸிற்கு முன்பே தொடங்கிய போட்டி.. விஜய்யின் ஜன நாயகன் பேனரின் மேல் இடம்பெற்ற சிவகார்த்திகேயன் பராசக்தி பட பேனர்!
Jana Nayagan VS Parasakthi: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்துவருபவர் தளபதி விஜய். இவரின் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படமானது 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இப்பண்டிகையில்தான் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் வெளியாகும் நிலையில், சமீபத்தில் இணையத்தில் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்திவருகிறது.
கோலிவுட் சினிமாவின் பிரபல நாயகனாக இருந்துவருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. மேலும் இவர் அரசியலில் இறங்கியுள்ள நிலையில், ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படத்திற்கு பின் இனிமேல் எந்த படங்களிலும் நடிக்கமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதி திரைப்படமாக மிக பிரம்மாண்டமாக தயாராகிவருவதுதான் ஜன நாயகன் திரைப்படம். இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் (H.Vinoth) இயக்க, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது தயாரித்துவருகிறது. இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். மேலும் மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன் மற்றும் பிரியாமணி உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீசிற்கு 6 நாட்களுக்கு பின் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி (Parasakthi) படமானது வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் ரிலீசிற்கு முன்பே போட்டிகள் நிலவும் நிலையில், சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் திரையரங்கு ஒன்றில், தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் பேனர் மிகவும் பெரியதாக வைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், தற்போது அந்த பேனரின் மேல் சிவகார்த்திகேயனின் பராசக்தி பட பேனர் இடம்பெற்றுள்ள நிலையில், இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிங்க: ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது பைசன் படக்குழு – உற்சாகத்தில் ரசிகர்கள்
இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெரும் புகைப்படம் தொடர்பான பதிவு :
Both Pongal releases #Parasakthi & #JanaNayagan started their outdoor promotions with Hording on the prime spots👌🔥 pic.twitter.com/XETGj0ECQR
— AmuthaBharathi (@CinemaWithAB) November 17, 2025
இந்த புகைப்படத்தில் ஜன நாயகன் படத்தின் மேல் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் பேனர் இடம்பெற்றுள்ள நிலையில், இது ரசிகர்கள் மத்தயில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிலம்பரசனின் STR49 படத்தின் நிலை என்ன?- உண்மையை உடைத்த கயாடு லோஹர்!
ஏற்கனவே இப்படத்திற்கும் இடையே போட்டி நிலவும் நிலையில், இந்த விஷயம் மேலும் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறு இப்படி தளபதியின் ஜன நாயகன் பட பேனரின் மீது சிவகார்த்திகேயன் நிற்பதுபோல பேனரை வைக்கலாம்? என ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்துவருகின்றனர். இந்த படங்களில் வெளியீட்டிருக்கு பிறகுதான் எந்த திரைப்படம் வெற்றிபெறும் என கூறமுடியும். பராசக்தி படத்தை ஒப்பிடும்போது ஜன நாயகன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என வட்டாரங்கள் தெரிவிகிறது.