Sai Abhyankkar: கார்த்தியின் மார்ஷல் படத்தின் கதைக்களம் இதுதான்… அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!
Sai Abhyankkar About Marshal Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி. இவர் மற்றும் டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகிவரும் படம்தான் மார்ஷல். இந்த படமானது எப்படிப்பட்ட கதையில் உருவாகிவருகிறது என்பது குறித்து, அப்படத்தின் இசையமைப்பாளார் சாய் அபயங்கர் அப்டேட் கொடுத்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் மெய்யழகன் (Meiyazhagan). இந்த படம் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து புதிய படங்களில் இவர் சிறப்பாகவே நடித்துவந்தார். மேலும் கடந்த 2025 மே மாதத்தில் வெளியான ஹிட்3 (HIT 3) படத்தில் கேமியோ வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். தெலுங்கு மொழியில் வெளியான இப்படத்தின் தொடர்ச்சியான ஹிட்4 (HIT4) படத்தில் கார்த்திதான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவரின் நடிப்பில் சர்தார் 2 (Sardar 2) , வ வாத்தியார் ( Vaa Vaathiyaar) மற்றும் மார்ஷல் (Marshal) போன்ற படங்கள் தயாராகிவருகிறது. அதில் இயக்குநர் தமிழ் (Thamizh)இயக்கத்தில் உருவாகிவரும் படம்தன மார்ஷல்.
இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துவருகிறார். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துவரும் நிலையில், இந்த படத்தின் கதை குறித்து அவர் அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, இப்படத்தின் கதை 1960ம் ஆண்டில் நடைபெறும் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகிவருவதாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: ருத்ராவாக மகேஷ்பாபு.. ராஜமவுலியின் ‘வாரணாசி’ பட டீசர்!
கார்த்தியின் மார்ஷல் படத்தின் கதை குறித்து அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர் :
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சாய் அபயங்கர், தனது இசையமைப்பில் உருவாகும் படங்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது அவர் கார்த்தியின் மார்ஷல் படம் குறித்தும் பேசியுள்ளார், அதில் சாய் அபயங்கர், “கார்த்தி சாரின் மார்ஷல் திரைப்படம் 1960ம் ஆண்டுகளின் பின்னணி கதையில் அமைந்துள்ளத ஒரு சுவாரஸ்யமான படம். இந்த படத்தய் நிச்சயமாக மக்கள் விரும்புவார்கள்.
இதையும் படிங்க: அருள்நிதி – மம்தா மோகன்தாஸின் ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
இந்த படமானது படமானது 60களில் உருவாகும் கதை என்பதால் அதற்கு ஏற்றதுபோல் எனது இசையை நான் அமைத்துவருகிறேன். மேலும் இன்றைய தலைமுறையை 60களின் வேர்களுடன் இணைக்கும் பாடல்களை இப்படத்திற்காக உருவாக்கிவருகிறேன்” எனவும் அந்த நேர்காணலில் அவர் ஓபனாக பேசியுள்ளார்.
மார்ஷல் திரைப்படம் குறித்து சாய் அபயங்கர் பேசிய வீடியோ பதிவு :
#SaiAbhyankkar Recent
– #Marshal is a very interesting 1960s-set subject — people are definitely going to love it. ✨🎬
– I’m doing a song that connects today’s generation with the 60s roots. 🎵🕰️
– We’re cooking something special. 🔥🎶pic.twitter.com/ITXb5YU82F— Movie Tamil (@_MovieTamil) November 16, 2025
கார்த்தியின் மார்ஷல் படத்தை அடுத்ததாக, விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணீதரன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கும் இவர்தான் இசையமைக்கவுள்ளாராம். இந்த படத்தை இயக்குநரும், தயாரிப்பளாருமான அட்லீ தயாரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மார்ஷல் படத்தை போல இப்படமும் 60களில் நடைபெறும் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கவுள்ளதாகவும் கூறபடுகிறது.