அருள்நிதி – மம்தா மோகன்தாஸின் ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
My Dear Sister Movie first look: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அருள்நிதி. இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்த திரைப்படம் உருவாகிவருகிறது. அந்த வகையில் நடிகை மம்தா மோகன்தாஸுடன் இவர் இணைந்து நடித்துவரும் புது படம்தான் மை டியர் சிஸ்டர். தற்போது இப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.
நடிகர் அருள்நிதி (Arulnithi) தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம்தான் ராம்போ (Rambo). இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க, இயக்குநர் எம்.முத்தையா (M.Muthaiah) இயக்கியிருந்தார். இவரின் பக்கத்தில் வெளியான இப்படமானது பாக்சிங் தொடர்பான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் டிமாண்டி காலனி 3 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இப்படங்களை தொடர்ந்து இவர் நடித்துவரும் புது படம்தான் “மை டியர் சிஸ்டர்” (My Dear Sister). இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், அதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: காதல் என்றால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?.. ரசிகரின் கேள்விக்கு பதிலை கொடுத்த தனுஷ்!
மை டியர் சிஸ்டர் திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட படக்குழு :
Fairness belongs to everyone. Justice Has No Gender ♥️#MyDearSister First look is here 😇
Title Promo : https://t.co/Wce4k75pI0 @arulnithitamil @mamtamohan@jrcprabhu @nivaskprasanna @PassionStudios_ @Sudhans2017 @GTelefilms @imManishShah @MeenakshiGovin2 @Venk_editor… pic.twitter.com/PUpeLIdIhl
— Passion Studios (@PassionStudios_) November 14, 2025
மை டியர் சிஸ்டர் திரைப்படம் :
இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில், நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், மற்றும் பிரபல மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் போன்ற நடிகர்களின் நடிப்பில் உருவாகிவரும் படம்தான் மை டியர் சிஸ்டர். இந்த படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துவருகிறது. மேலும் பைசன் திரைப்படத்திற்கு இசையமைத்த நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது அண்ணன் மற்றும் தங்கைக்கு நடுவே இருக்கும் பாசம், எமோஷனல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் இப்படமானது உருவாகிவருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விமர்சனங்கள் வந்தாலும் அவர் அதையே தேர்வுசெய்கிறார்… நானாக இருந்தால்- ராஷ்மிகாவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா!
இப்படமானது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாம். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் இந்த படத்தை படக்குழு வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.