Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காந்தா படமும் துல்கர் சல்மானின் நடிப்பில் ஹிட் அடித்ததா? எக்ஸ் விமர்சனம் இதோ

Kaantha Movie X Review: நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் காந்தா. இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

காந்தா படமும் துல்கர் சல்மானின் நடிப்பில் ஹிட் அடித்ததா? எக்ஸ் விமர்சனம் இதோ
காந்தாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 14 Nov 2025 11:15 AM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் காந்தா. நடிகர் துல்கர் சல்மான் (Actor Dulquer Salmaan) நடிப்பில் உருவான இந்தப் படம் இன்று 14-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போஸ், சமுத்திரகனி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். பீரியட் ட்ராமாவாக உருவாகி உள்ள இந்தப் படத்தை நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி ஆகியோரின் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருந்தது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி இருந்தது. இந்த நிலையில் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

காந்தா படம் குறித்த எக்ஸ் விமர்சனம் இதோ:

படம் சிறப்பாக உள்ளது, படத்தின் காட்சிகள், கலை வடிவமைப்பு மற்றும் இசை ஆகியவை சிறப்பாக உள்ளது. மேலும் ராணா டகுபதி சர்காசம் சிறப்பு. ஏன் இவ்வளவு வெறுப்பு, இந்தப் படத்துக்கு இவ்வளவு கடின உழைப்பும் ஆர்வமும் எங்கிருந்து வந்தது என்று எனக்குப் புரியவில்லை.

காந்தா படம் குறித்த எக்ஸ் விமர்சனம் இதோ:

சிறப்பான முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி ஓகேதான். துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ & சமுத்திரக்கனி, என்ன ஒரு சக்திவாய்ந்த நடிப்பு. படம் பல அற்புதமான தருணங்களால் நிறைந்துள்ளது இந்த காந்தா படம்.

காந்தா படம் குறித்த எக்ஸ் விமர்சனம் இதோ:

ஒரு நடிகர் இன்னொரு நடிகரின் நிழலில் விழும்போது..!! தீவிரமான ட்ராமா அற்புதமான ஒளி மற்றும் காட்சிகளும் உள்ளது. ஒவ்வொரு காட்சியும் உண்மையில் செதுக்கப்பட்டு, திரைப்படத்தில் உங்களை திரைப்பட உலகிற்குள் அழைத்து செல்கிறது.

காந்தா படம் குறித்த எக்ஸ் விமர்சனம் இதோ:

துல்கர் சல்மானின் நடிப்பு காந்தா படத்தில் மிகச் சிறப்பாக உள்ளது. படத்தில் சில குறிப்பிட்ட காட்சிகள் மற்றும் க்ளைமேக்ஸ் அருமை. சமுத்திரகனி அவரது சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் கொடுத்துள்ளார். மற்ற நடிகர்களின் நடிப்பும் அருமை.

Also Read… சின்ன வயசு க்ரஷ் யார்?  ரசிகரின் கேள்விக்கு நடிகை ராஷ்மிகா ஓபன் டாக்

காந்தா படம் குறித்த எக்ஸ் விமர்சனம் இதோ:

முதல் பாதி மிகச்சிறப்பான ட்ராமா. இரண்டாம் பாதி இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் மற்றும் ட்ராமா. 1950-ம் ஆண்டுகளில் உள்ளது போல சினிமா துறையை காட்டியுள்ளனர். நிச்சயமாக இந்தப் படத்திற்கான துல்கர் சல்மனுக்கு தேசிய விருது வழங்க வேண்டும். மற்ற நடிகர்களின் நடிப்பும் மிகச் சிறப்பாக உள்ளது.

Also Read… இயக்குநர் மகிழ் திருமேனி அடுத்து இயக்க போவது இவரா? வைரலாகும் தகவல்