Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

kayadu Lohar: விமர்சனங்கள் வந்துகொண்டுதான் இருக்கும் – உருவகேலி குறித்து மனம்திறந்த கயாடு லோஹர்!

Kayadu Lohar on Body Shaming: தென்னிந்திய சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் கயாடு லோஹர். இவர் தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இவர், தன்னை பற்றி வரும் உருவகேலி மற்றும் விமர்சனங்கள் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

kayadu Lohar: விமர்சனங்கள் வந்துகொண்டுதான் இருக்கும் – உருவகேலி குறித்து மனம்திறந்த கயாடு லோஹர்!
கயாடு லோஹர்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 15 Nov 2025 17:59 PM IST

நடிகை கயாடு லோஹர் (kayadu Lohar) தமிழ் சினிமாவில் கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் வெளியான டிராகன் (Dragon) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க, பிரதீப் ரங்கநாதனுக்கு (Pradeep Ranganathan) ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து வரிசையாக அடுத்தடுத்த படங்களில் இவர் ஒப்பந்தமாகிவந்தார். அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் 2 படங்கள் மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் 1 படம் என அடுத்தடுத்த படங்கள் மிக பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவரின், போட்டோஸ் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருவதுண்டு.

அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அழகுசாதன பொருட்கள் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை சந்தித்த இவர், தன்மீது வரும் விமர்சனங்கள் மற்றும் உருவகேலி (Body shaming) குறித்து மனம் திறந்துள்ளார்.

இதையும் படிங்க: விமர்சனங்கள் வந்தாலும் அவர் அதையே தேர்வுசெய்கிறார்… நானாக இருந்தால்- ராஷ்மிகாவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா!

தன்மீதான விமர்சனங்கள் மற்றும் உருவகேலி குறித்து ஓபனாக பேசிய கயாடு லோஹர்:

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய கயாடு லோஹர், ” நாம் எங்கு சென்றாலும் நம் மீது விமர்சனங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். அதிலிருந்து தப்பிப்பது கடினம்தான். எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கமுடியாது, அவரவருக்கென தனித்துவம் இருக்கத்தான் செய்யும். எல்லோரும் ஒரே மாதிரி இருந்துவிட்டா தனித்துவம் என்பது இல்லாமல் போய்விடும்.

இதையும் படிங்க: ‘அஜித் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்’- ஓபனாக பேசிய துல்கர் சல்மான்!

அனைவரிடமும் அன்பு மற்றும் கருணையை காட்டவேண்டும். அதை கற்றுக்கொண்டால், வாழ்க்கை இன்னும் எளிமையாக இருக்கும். இது அனைவரும் கண்டிப்பாக புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் ஆகும்” என அதில் அவர் வெளிப்படையாக பதிலளித்திருந்தார். இது தொடர்பான தகவல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

நடிகை கயாடு லோஹரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by kayadulohar (@kayadu_lohar_official)

சமீபகாலமாக நடிகைகள் தொடர்பான உருவகேலி மற்றும் எடை தொடர்பான பிரச்னைகள் தமிழ் சினிமாவில் எழுந்துவருகிறது. பிரபல யூடியூபர் ஒருவர் நடிகை கௌரி ஜி கிஷனை உங்களின் எடை எவ்வளவு என பட நிகழ்ச்சியில் கேட்டிருந்தார். இது பெரும் பிரச்சனையாக வெடிக்க, பல பிரபலங்கள் ஆதரவு தெரிவிகிர்ந்தனர். மேலும் தொடர்ந்து இணையதளங்களில் நடிகைகளின் புகைப்படங்களை ஏஐ மூலம் தவறாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாகவும் பல நடிகைகள் தங்களின் கருத்துக்களையும் வெளிப்படையாக தெரிவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.