Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜய் சேதுபதியின் அந்த படத்தை 100 தடவை பார்த்திருக்கிறேன்… அவருக்கு கால் பண்ணி பேசினேன்- ஜான்வி கபூர்!

Janhvi Kapoor About Vijay Sethupathi: இந்திய சினிமாவில் குறிப்பாக பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையக் இருந்துவருபவர் ஜான்வி கபூர். இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்ததில், தான் அதிகம் பார்த்த படம் என்ன என்பது பற்றியும், அவரிடம் பேசியது குறித்தும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அது குறித்து பார்க்கலாம்.

விஜய் சேதுபதியின் அந்த படத்தை 100 தடவை பார்த்திருக்கிறேன்… அவருக்கு கால் பண்ணி பேசினேன்- ஜான்வி கபூர்!
ஜான்வி கபூர் மற்றும் விஜய் சேதுபதிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Nov 2025 08:30 AM IST

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் தொடர்ந்த வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக தலைவன் தலைவி (Thalaivan Thalavii) என்ற படமானது வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நித்யா மேனன் (Nithya Menen) இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடந்து தெலுங்கில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) இயக்கத்தில் பூரிசேதுபதி (PuriSethupathi) என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் டைட்டில் சில வாரங்களுக்கு முன் வெளியாகவிருந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதை அடுத்ததாக இன்னும் தொடர்பான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor), விஜய் சேதுபதி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அவர் அதில் விஜய் சேதுபதியின் “நானும் ரௌடி தான்” (Nanum Rowdy Dhaan) என்ற படத்தை கிட்டத்தட்ட 100 தடவைக்கும் மேல் பார்த்ததை பற்றி ஓபனாக பேசியுள்ளார். மேலும் இது குறித்து விஜய் சேதுபதியிடம் பேசியது பற்றியும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எனக்கு நடிக்கும் எண்ணமே போயிடுச்சி.. ஆனால் தனுஷ் என்னை தொடர்ந்து தயார்படுத்தினார் – ஆண்ட்ரியா

நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் :

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி குறித்து வெளிப்படையாக பேசிய ஜான்வி கபூர் :

அந்த நேர்காணலில் நடிகை ஜான்வி கபூர், நான் நானும் ரௌடி தான் படத்தை பார்த்த பிறகு விஜய் சேதுபதி சாருக்கு கால் பண்ணியிருந்தேன். மேலும் இந்த படத்தை நான் கிட்டத்தட்ட 100 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறேன். அப்போது அவருக்கு கால் பண்ணி பேசியபோது, அவரிடம் நான், “சார் நான் உங்களின் ரசிகை, உங்களின் படத்தை 100 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறேன். நான் உங்களுடன் நடிப்பதற்கு மிகவும் ஆசையாக இருக்கிறேன்” என கூறினேன்.

இதையும் படிங்க: சின்ன வயசு க்ரஷ் யார்? ரசிகரின் கேள்விக்கு நடிகை ராஷ்மிகா ஓபன் டாக்

அவரிடம் கால் பண்ணும்போது, அவர் என்னிடம் ஐயோ, ஆஹ என மிகவும் கூச்சப்பட்டுப் பேசினார். நான் பேசியதில் அவர் மிகவும் ஆச்சரியமடைந்தார். அந்த படத்தில் விஜய் சேதுபதி பேசும் ஒவ்வொரு வசனமும் மிகவும் நகைச்சுவையாகவும், அருமையாகவும் இருக்கும். மேலும் அவரின் நடிப்பில் வெளியான சூப்பர் டீலெக்ஸ் படமும் எனக்கு பிடிக்கும் என அதில் ஜான்வி கபூர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.