Dulquer Salmaan: ‘அஜித் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்’- ஓபனாக பேசிய துல்கர் சல்மான்!
Dulquer Salmaan About Ajith Kumars Racing Passion: தென்னிந்திய சினிமாவில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை கவர்ந்துவருபவர்தான் துல்கர் சல்மான். இவரின் நடிப்பில் இன்று காந்தா படமானது வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் தல அஜித் குமார் குறித்து இவர் மனம் திறந்த பேசியுள்ளார்.
நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி ஹீரோவாக நடித்துவருகிறார். என்னதான் இவர் மலையாளம் சினிமாவின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தாலும், இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழியிலும் அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்தான் காந்தா (Kaantha). இந்த படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்க, துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி (Rana) இணைந்து தயாரித்திருந்தார். இந்த படமானது ஒரு ரெட்ரோ கால கதைக்களம் கொண்ட படமாக வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்துவருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் துல்கர் சல்மான் தல அஜித் குமார் (Ajith Kumar) குறித்து பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. அவரை தனது இன்ஸ்பிரேசன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விஷயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க : வெற்றிமாறன் எந்த கேரக்டருக்காகவும் என்னை பாராட்டியது இல்லை… ஆனால் – ஆண்ட்ரியா சொன்ன விசயம்
தல அஜித் குமார் குறித்து மனம் திறந்த நடிகர் துல்கர் சல்மான் :
அந்த நேர்காணலில் ஓபனாக பேசிய துல்கர் சல்மான், “அஜித் குமார் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேசன். அவர் இந்த வயதிலும், அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றை நோக்கி தனது பயனத்தய் மேற்கொள்கிறார். அவருடைய நீண்டநாள் கனவான ரேஸிங்கை நினைவாக்கியுள்ளார். இந்த விஷயமானது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று அந்த நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
காந்தா திரைப்படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
The world of Kaantha unfolds today!💎
TRAILER OUT NOW!💥Tamil – https://t.co/BrNytjBTok
Telugu – https://t.co/NUKPj5wKg8
A @SpiritMediaIN and @DQsWayfarerFilm production 🎬#Kaantha #DulquerSalmaan #RanaDaggubati #SpiritMedia #DQsWayfarerfilms #Bhagyashriborse…
— Dulquer Salmaan (@dulQuer) November 6, 2025
இந்த கந்தா படத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி மற்றும் ராணா போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் கடந்த 1960ம் ஆண்டில் தமிழ் சினிமாவின் ஸ்டூடியோஸ் மற்றும் ஷூட்டிங்கே அவ்வாறு இருந்தது தொடர்பான மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நகைச்சுவை உணர்வுகொண்ட கீர்த்தி… ரிவால்வர் ரீட்டா பட ட்ரெய்லரைப் பாராட்டிய நானி!
இது தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழை தொடர்ந்து இப்படத்திற்கு தெலுங்கு மக்களிடையேயும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தின் மூலம் தமிழ் அறிமுகமாகும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸிற்கு, இது சரியான முதல் படம் என ரசிகர்களை அவரின் நடிப்பை பாராட்டிவருகிறனர்.



