ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வைரலாகும் தகவல்
Jana Nayagan Movie Audio Launch: தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் அப்டேட் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் இசை வெளியீடு குறித்த அப்டேட் என்ன என்று பார்க்கலாம்.
ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் தற்போது ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல இயக்குநர் எச்.வினோத் இயக்கி உள்ள நிலையில் இது நடிகர் விஜயின் கடைசிப் படம் என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோலிவுட் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் விஜய். இவர் தீவிர அரசியலில் களம் இறங்கியுள்ளதால் இனி படங்களில் நடிக்க மாட்டார் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் பீஸ்ட் படத்தை தொடர்ந்து ஜோடியாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் பாபி தியோ, நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பான் இந்திய அளவில் பிரபல நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.




ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?
இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே உள்ளது, இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.
அதனபடி இந்த இசை வெளியீட்டு விழா குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… வெற்றிமாறன் எந்த கேரக்டருக்காகவும் என்னை பாராட்டியது இல்லை… ஆனால் – ஆண்ட்ரியா சொன்ன விசயம்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan Audio Launch announcement expected this week!🎶🧨
– The Audio Launch will take place in Malaysia on DECEMBER 27, 2025 — let’s wait for the official update 📢
– The biggest Audio Launch of the iconic #ThalapathyVijay × #Anirudh combo 🔥🎤🎶
In Cinemas JAN 9th, 2026… pic.twitter.com/SktVKzxuyJ
— Movie Tamil (@_MovieTamil) November 16, 2025
Also Read… சூர்யாவின் கேரியரை மாஸாக மாற்றிய நந்தா படம்… திரையரங்குகளில் வெளியாகி 24 வருடங்களை நிறைவு செய்தது!