அரசன் படத்தில் கவினுக்காக ஒரு கதாபாத்திரம் இருந்தது.. ஆனால் – வெற்றிமாறன் ஓபன் டாக்!
Vetrimaaran About Kavin: தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநராக இருந்துவருபவர் வெற்றிமாறன். இயவரின் இயக்கத்திலும், தயாரிப்பிலும் தொடர்ந்து படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் சிம்புவின் அரசன் படத்தை தற்போது இயக்கிவருகிறார். இதில் நடிகர் கவினுக்காக ஸ்பெஷல் ரோல் ஒன்று இருந்தது குறித்து வெற்றிமாறன் ஓபனாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருந்துவருபவர் வெற்றிமாறன் (Vetrimaaran). இவர் தமிழில் தனுசுடன் (Dhanush) மட்டுமே கிட்டத்தட்ட 4-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் இவரை தொடர்ந்து விஜய் சேதுபதி, (Vijay Sethupathi) சூரி மற்றும் தற்போது சிலம்பரசன் (Silambarasan) என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிவருகிறார். இவரின் இயக்கத்தில் விடுதலை பார்ட் 2. இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தற்போது நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் அரசன் (Arasan) என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், அதை தொடர்ந்து ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் மேலும் இவர் நடிகர் கவினின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் (Mask) என்ற படத்தையும் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், அதில் பேசிய வெற்றிமாறன் அரசன் படத்தில் கவினுக்காக (Kavin) ஒரு கதாபாத்திரம் இருந்ததாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: AK 64 படத்தை தயாரிப்பதில் இருந்து விலகிய பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்
அரசன் திரைப்படத்தில் கவினுக்காக இருந்த வேடம் குறித்து வெற்றிமாறன் பேச்சு:
அந்த நேர்காணலில் இயக்குநர் வெற்றிமாறன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர், “கவினிடம் அரசன் திரைப்படத்தின் ஒரு காட்சியை அவரிடம் கூறியிருக்கிறேன். மேலும் இந்த படத்தில் ஒரு ஸ்பெஷல் கதாபாத்திரம் இருந்தது. அந்த ஸ்கிரிப்டில் இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் கவினை நடிக்கவைக்கவேண்டும் என நினைத்தேன். பின் கொஞ்ச நாட்களுக்கு பின் அந்த கதாபாத்திரத்தை கதையிலிருந்தே நீக்கிவிட்டேன்.
இதையும் படிங்க: காந்தா படமும் துல்கர் சல்மானின் நடிப்பில் ஹிட் அடித்ததா? எக்ஸ் விமர்சனம் இதோ
அதன் காரணமாக கவினை அரசன் படத்தில் வேண்டாம் என கூறிவிட்டேன்”
என அவர் தெரிவித்திருந்தார். அந்த நேர்காணலில் உடனிருந்த நடிகை ஆண்ட்ரியா, நடிகர் கவினிடம், “நல்ல வேலை நீங்கள் நடிப்பதற்கு முன்னதாகவே கூறிவிட்டார், அதை நினைத்து சந்தோஷ படுங்க” என கூறினார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
அரசன் படத்தில் கவினை நடிக்கவைக்க விரும்பியது குறித்து வெற்றிமாறன் பேசிய வீடியோ :
#Vetrimaaran Recent
– I narrated a scene from #Arasan to #Kavin and asked him to play a role, but later I changed it and told him no.#Mask | #SilambarasanTRpic.twitter.com/lbe6pAzvJK— Movie Tamil (@_MovieTamil) November 14, 2025
நடிகர் கவின் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியில் உருவாகியுள்ள மாக்ஸ் படமானது வரும் 2025 நவம்பர் 21ம் தேதியில் வெளியாகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியா மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.