தளபதி விஜயை எதிர்கிறாரா சிவகார்த்திகேயன்? பராசக்தி படக்குழு வெளியிட்ட பதிவால் வெடித்த சர்ச்சை!
Jana Nayagan vs Parasakthi: தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர்தான் தளபதி விஜய். இவரின் ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த பாடலின் பார்வைகள் தொடர்பான சர்ச்சை ஏற்கனவே இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், பராசக்தி படக்குழு வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய்யின் (Thaapathy Vijay) கடைசி திரைப்படமாக தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிவரும் படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்திருக்கும் நிலையில், மமிதா பைஜூ (Mamitha baiju), நரேன், பிரியாமணி, பாபி தியோல் உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்க, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் கடந்த 2025 நவம்பர் 8ம் தேதியில் “தளபதி கச்சேரி” (Thalapathy Katcheri) என்ற முதல் பாடல் வெளியாகியிருந்தது.
இந்த பாடலில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ என மூவரும் இணைந்து நடனமாடியுள்ளனர். இந்த பாடலானது தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது. அந்த வகையில் விஜயின் மற்ற பாடல்களை ஒப்பிடும்போது இந்த தளபதி கச்சேரி பாடலுக்கு வரவேற்பு குறைவாக இருப்பதாகவும், யூடியூபில் வியூஸ் குறைவதாக இருப்பதாகவும் இணையத்தில் பேசப்பட்டுவந்தது.




இதனை அடுத்ததாக திடீரென நேற்று 2025 நவம்பர் 11ம் தேதியில் இப்பாடலின் வியூஸ் எண்ணிக்கை 3, 4 மில்லியன் என அதிகரித்த நிலையில் இணையத்தில் பேசும்பொருளாக மாறியது. இதை கலாய்க்கும் விதத்தில் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) பராசக்தி (Parasakthi) படக்குழு, அந்த படத்தின் முதல் பாடலின் (Adi Alaiye) வியூஸ் 15 மில்லியன். இதுதான் உண்மையான வியூஸ் என்று பகிர்ந்து. அதற்கு கீழ் “IYKYK” என விஜய் ரசிகர்களை கோபப்படுத்தும் விதத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: எனது படங்களைப் பார்த்துவிட்டு சூர்யா அண்ணா மெசேஜ் செய்வார் – துல்கர் சல்மான்
பராசக்தி படக்குழு முதல் பாடல் வியூஸ் குறித்து வெளியிட்ட சர்ச்சை பதிவு :
#Parasakthi First Single crossed 15 Million+ ORGANIC Views in YouTube
IYKYK
🔗 https://t.co/X43GCiAMGO#ParasakthiFromPongal#ParasakthiFromJan14@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14… pic.twitter.com/99ST2Brvkk
— DawnPictures (@DawnPicturesOff) November 12, 2025
இந்த பதிவானது தற்போது தளபதி விஜயின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டுவருகிறது. மேலும் தளபதி விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படமான ஜன நாயகன் மற்றும் பராசக்தி படங்கள் 6 நாட்கள் இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த இரு படங்களுக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்படும் என ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டுவந்தது.
இதையும் படிங்க: தளபதி விஜய்யின் பாடலுக்கு மவுசு குறைந்துவிட்டதா? ஹேட்டர்ஸ்க்கு யூடியூப் கொடுத்த பதில்!
இந்நிலையில் ஜன நாயகன் படத்தின் பாடல் தொடர்பான விமர்சனங்கள் இணையாயத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில், அதை கொச்சைப் படுத்தும் விதத்தில் பராசக்தி படக்குழு இந்த மாதிரியான விஷயத்தை செய்துவருவதாக வட்டாரங்கள் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜன நாயகன் VS பராசக்தி :
இந்த இரு படங்களுக்கு ஆரம்பத்திலிருந்து போட்டி நிலவிவருகிறது. ஜன நாயகன் படமானது ஆரம்பத்திலிருந்து 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையோடு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின் பராசக்தி படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியிருந்தார். இந்நிலையில் தளபதி விஜயுடன் சிவகார்த்திகேயன் மோதுகிறாரா? என்பதுதான் ரசிகர்களின் பேச்சாக இருந்தது. தற்போது இந்த இரு படங்களும் மோதுகிறது என்பத உறுதியான நிலையில், ஜன நாயகன் படத்திற்கு அதிக வரவேற்புகள் கிடைக்கும் என வட்டாரங்கள் தெரிவிகிறது.