கருப்பு படத்திற்கு முன்னதாக வெளியாகிறதா சூர்யா 46 படம்? வைரலாகும் தகவல்
Actor Suriya Movie Update: நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். அதன்படி அவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவருக்கு ரசிகர்கள் மக்களிடையே மட்டும் இன்றி பிரபலங்களிடையேயும் அதிகம். அதன்படி இந்திய சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்று பேட்டிகளில் கேட்கும் போது அது சூர்யா என்று வெளிப்படையாக பேசியுள்ளார். குறிப்பாக பெண் நடிகைகளுக்கு செலிபிரிட்டி க்ரஷ் யார் என்று கேள்வி எழுப்பப்படும்போது பெரும்பாலான நபர்கள் தங்களது செலிபிரிட்டி க்ரஷ் சூர்யா என்று தெரிவித்து இருந்தது தொடந்து கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் சூர்யா நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இதற்கு இடையே சூர்யா 47 படத்தை மலையாள சினிமாவின் பிரபல இயக்குநராக வலம் வரும் ஜித்து மாதவன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் ஃபகத் பாசில் மற்றும் நஸ்ரியா நசீம் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக வெளியான தகவலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.




கருப்பு படத்திற்கு முன்னதாக வெளியாகிறதா சூர்யா 46 படம்?
அதன்படி தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படங்களின் அதிகாரப்பூர்வ அப்டேட்களும் தகவல்களும் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி அடுத்ததாக சூர்யா நடிப்பில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆனால் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு வெளியாகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இந்த நிலையில் அதற்கு முன்னதாக சூர்யா 46 படம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.
Also Read… இயக்குநர் மகிழ் திருமேனி அடுத்து இயக்க போவது இவரா? வைரலாகும் தகவல்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Buzz Update — Before #Suriya’s #Karuppu releases,
there is a high chance that #Suriya46 will hit the screens first 😳🔥
— The release dates of both films are expected to be announced soon 🎬📢
— Fans can get ready for a back-to-back Suriya fest 🦅💥#Suriya47 pic.twitter.com/qr6CRld5GQ— Movie Tamil (@_MovieTamil) November 15, 2025
Also Read… ரஜினி படத்தில் இருந்து விலகிய சுந்தர் சி – அடுத்த இயக்குநர் இவரா?