ரவி மோகனின் படத்திற்கு ப்ரோ கோட் பெயரை பயன்படுத்த விதித்த தடை நீட்டிப்பு!
Bro Code Movie Name Case: நடிகர் ரவி மோகன் நடிப்பில் தற்போது தொடர்ந்து படங்கள் உருவாகி வெளியீட்டிற்கு வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. இந்த நிலையில் இவரது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரித்து நடித்து வரும் படம் தான் ப்ரோ கோட்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான காதலிக்க நேரமில்லை படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகன் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் உருவாகி திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. அதன்படி ரவி மோகன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பராசக்தி. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகர் ரவி மோகன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. இந்தப் படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்துள்ள படங்கள் கராத்தே பாபு, ஜீனி மற்றும் ப்ரோ கோட். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் திரையரங்குகளில் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படங்கள் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமே வலம் வந்த ரவி மோகன் சமீபத்தில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
ப்ரோ கோட் படத்தின் பெயருக்கான தடை நீட்டிப்பு:
அதன்படி நடிகர் ரவி மோகன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் படங்களை தயாரிப்பது மட்டும் இன்றி அந்தப் படங்களில் நடிக்கவும் படங்களை இயக்கவும் உள்ளது குறித்து ரவி மோகன் அறிவித்து இருந்தார். அதன்படி ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் ப்ரோ கோட் படத்தில் நடிகராகவும் அன் ஆர்டினரி மேன் படத்தின் மூலம் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்தின் நாயகனாக நடிகர் யோகி பாபு நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.




Also Read… கொலவெறி பாடல் இப்படிதான் உருவானது… தனுஷ் ஓபன் டாக்
இந்தப் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில் நடிகர் ரவி மோகன் தயாரித்து நடிக்கும் ப்ரோ கோட் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. அதனபடி இந்த ப்ரோ கோட் பெயர் ஒரு பிரபல மதுபானத்தின் பெயர் என்றும் இதனை படத்திற்கு பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்று ப்ரோ கோட் மதுபான நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று வழக்கை முடித்துவைத்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது படத்திற்கு ப்ரோ கோட் என்ற பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தடையை நீட்டித்து உள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read… ஹீரோவாக கவின்.. வில்லியாக ஆண்ட்ரியா.. மாஸ்க் படம் எப்படி இருக்கு – எக்ஸ் விமர்சனம் இதோ