லோகாவின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து புதுப் படத்தில் கமிட்டான கல்யாணி பிரியதர்ஷன்!
Actress Kalyani Priyadharshan : மலையால சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் அவர் அடுத்ததாக வெளியாக உள்ள படம் தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது.
மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக இருந்த பிரியதர்ஷனின் மகள் தான் கல்யாணி பிரியதர்ஷன். பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இவரது மகளாக சினிமாவில் அறிமுகம் ஆன நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மலையாள சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் மலையாள சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் அவ்வபோது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஹீரோ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகம் ஆனார்.
இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து தமிழில் அடுத்து மாநாடு படத்தில் நடிகர் சிம்பு உடன் இணைந்து நடித்து இருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் தற்போது ஜீனி மற்றும் மார்ஷல் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இறுதியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான லோகா படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.




பூஜையுடன் தொடங்கியது நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் புதுப் படம்:
லோகா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் திரவியம் எஸ்என் என்பவர் இயக்க உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் முன்னதாக மாயா, மாநகரம், மான்ஸ்டர், டானாக்காரன், இறுகப்பற்று மற்றும் பிளாக் ஆகியப் படங்களை தயாரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகை கல்யாணி பிரியதர்ஷனை வைத்து 7-வது படத்தை தற்போது தயாரிக்கிறது.
Also Read… வா வா என் தேவதையே… பிரேம்ஜி அமரன் – இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
படக்குழு வெளியிட்ட பூஜை படங்கள்:
Lights on. Camera rolling. Shoot starts today for Project No.7.🎬✨
Featuring the elegant and enchanting @kalyanipriyan in the lead 💛#Devadarshni @vinoth_kishan #ThiraviyamSN @justin_tunes @gokulbenoy @Aral_Thangam #MayaPandi @prabhu_sr @rthanga #ProjectNo7 pic.twitter.com/gf55g7YqKW— Potential Studios LLP (@Potential_st) November 19, 2025
Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 46 படத்தின் ஷூட்டிங் – வைரலாகும் முக்கிய தகவல்