Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ள டெல்லி க்ரைம் சீசன் 3 எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Delhi Crime Season 3 Review: நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. முன்னதாக இரண்டு சீசன்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல தற்போது மூன்றாவது சீசன் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ள டெல்லி க்ரைம் சீசன் 3 எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
டெல்லி க்ரைம் சீசன் 3Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Nov 2025 20:43 PM IST

ஓடிடியில் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் மட்டும் வெளியாவது மட்டும் இன்றி பல ஓடிடி நிறுவனங்களின் நேரடித் தயாரிப்பில் இணையதள தொடர்களும் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் க்ரைம் த்ரில்லர், இன்வெஸ்டிகேஷன், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் ஆக்‌ஷன் என அனைத்து ஜானர்களிலும் தொடர்ந்து இணையதள தொடர்ந்துகள் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியின் தயாரிப்பில் இந்தி மொழியில் உருவான இணையதள தொடர்தான் டெல்லி க்ரைம். டெல்லி மற்றும் அந்தன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாநிலங்களில் நடைபெறும் குற்றங்களை விசாரிக்கும் போலீஸ் அதனை எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பதை மையமாக வைத்துதான் இந்த டெல்லி க்ரைம் சீரிஸ் உருவாகி தொடர்ந்து வெளியாகி வருகின்றது. முன்னதாக இரண்டு சீசன்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல தற்போது 3-வது சீசன் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதன்படி கடந்த 13-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பானது டெல்லி க்ரைம் சீசன் 3 இணையதள தொடர். இந்த தொடரில் நடிகர்கள் ஷெபாலி ஷா, ராஜேஷ் தைலாங், ரசிகா துகல், டென்சில் ஸ்மித், யஷஸ்வினி தயாமா, ஹுமா குரேஷி, சயானி குப்தா, அனுராக் அரோரா, கோபால் தத், சித்தார்த் பரத்வாஜ், ஜெயா பட்டாச்சார்யா, ஆகாஷ் தஹியா, யுக்தி தரேஜா என பலர் இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தனர்.

டெல்லி க்ரைம் சீசன் 3 தொடரின் கதை என்ன?

டேல்லியில் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் ஷெபாலி ஷா துப்பாக்கிகள் கடத்தப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து விசாரிக்க செல்கிறார். அப்போது இவர்கள் பிடித்த லாரியில் கூட்டம் கூட்டமாக இளம் பெண்கள் பிடிபடுகின்றனர். அவர்களைப் பிடித்து விசாரிக்கும் போது வருமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நல்ல வேலை வாங்கித்தருவதாக கூறி அவர்களை கடத்தி ஒரு கும்பல் விற்பனை செய்வது விசாரனையில் தெரியவருகிறது.

Also Read… கருப்பு படத்திற்கு முன்னதாக வெளியாகிறதா சூர்யா 46 படம்? வைரலாகும் தகவல்

இதனைத் தொடர்ந்து விசாரிக்கும் ஷெபாலி ஷா முன்னதாகவே பல பெண்கள் கடத்தப்பட்டுள்ளதை அறிகிறார். அவர்களை தேடிச் செல்லும் விசாரணையில் பல திடிக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றது. இறுதியில் இந்த வழக்கை அவர் எப்படி விசாரித்து கண்டுபிடித்து முடித்தார் என்பதே இந்த இணையதள தொடரின் கதை ஆகும். ஒவ்வொரு சீசனும் ஒரு குற்றத்தை அடிப்படையாக கொண்டு விசாரிக்கப்படுவது போல காட்டப்படும் நிலையில் தற்போது இந்த வழக்கு இளம் பெண்களைக் கடத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தை இயக்கும் நடிகர் தனுஷ்? இது புது ட்விஸ்ட்டா இருக்கே