17 நாட்கள் நான்ஸ்டாப் படப்பிடிப்பு – மகுடம் படம் குறித்து விஷால் வெளியிட்ட சூப்பர் அப்டேட்
Vishal Magudam Movie Update: நடிகர் விஷால் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் மகுடம். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு குறித்து நடிகர் விஷால் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வருபவர் நடிகர் விஷால் (Actor Vishal). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஷால் நடிப்பில் தொடர்ந்து மார்க் ஆண்டனி, ரத்னம் மற்றும் மத கஜ ராஜா என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது நடிகர் விஷாலின் படங்கள். அதன்படி இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான மத கஜ ராஜா படம் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டு இருந்தது. பல ஆண்டுகளாக படம் திரையரங்குகளில் வெளியிடமுடியாமல் கிடப்பில் இருந்த நிலையில் பல தடைகளைத் தாண்டி கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிதாக எடுக்கப்பட்ட படங்களுடன் போட்டிப் போட்டுக்கொண்டு வெளியானது.
12 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்து இருந்தாலும் இந்தப் படம் புதிதாக எடுக்கப்பட்ட படங்களுடன் போட்டிப்போட்டு அத்தனைப் படங்களையும் பின்னுக்குத்தள்ளி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றி பல ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியிடப்படாமல் இருக்கும் பலப் படங்களுக்கு உந்துதலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.




விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் அப்டேட்:
இந்த நிலையில் முன்னதாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிக்க உள்ள மகுடம் படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வந்த நிலையில் இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஷால் தானே இந்தப் படத்தை இயக்க முன்வந்தார்.
இது தொடர்பான அப்டேட்டும் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் நடிகர் விஷால் தற்போது படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதில் மகுடம் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி தொடர்ந்து 17 நாட்கள் நடைப்பெற்றது. மேலும் மகுடம் படம் அடுத்தக்கட்டத்திற்கு எட்டியுள்ளது என்று வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
Also Read… ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தை இயக்கும் நடிகர் தனுஷ்? இது புது ட்விஸ்ட்டா இருக்கே
நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Climax Sequence: DONE.
17 days. Non-stop. High-voltage action.#Magudam / #Makutam enters its next phase.@dhilipaction pic.twitter.com/sBCd9UlRAM— Vishal (@VishalKOfficial) November 17, 2025
Also Read… தோ கிலோமீட்டர்… தோ கிலோமீட்டர்… 8 ஆண்டுகளை நிறைவு செய்தது தீரன் அதிகாரம் ஒன்று படம்!