Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rashmika Mandanna: உங்களுக்கான முடிவை மற்றவர்களை எடுக்கவைக்காதீர்கள்.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்!

Rashmika Mandanna About Self-decision: பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கேர்ள்ஃபிரண்ட். இந்த படத்தின் மூலம் தான் கற்றுக்கொண்ட விஷயம் குறித்து, நிகழ்ச்சி ஒன்றில் ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக பேசியுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Rashmika Mandanna: உங்களுக்கான முடிவை மற்றவர்களை எடுக்கவைக்காதீர்கள்.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்!
ராஷ்மிகா மந்தனாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Nov 2025 13:43 PM IST

நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் என பல்வேறு மொழி படங்கள் தொடந்து உருவாகிவருகிறது. அந்த வகையில், இவர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம்காட்டிவருகிறார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் தி கேர்ள்ஃபிரண்ட் (The Girlfriend). இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா லீட் கதாநாயகியாக நடிக்க, கன்னட நடிகர் தீட்சித் ஷெட்டி (Dheekshith Shetty) இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தை பிரபல நடிகரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரன் இயக்கியிருந்த நிலையில், கடந்த 2025 நவம்பர் 7ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இப்படத்திற்கு மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்திருந்த நிலையில், திரையரங்குகளில் வெளியாகிவருகிறது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஷ்மிகா மந்தனா, இந்த படத்தின் மூலம், தான் கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர், ” உங்களுக்கான முடிவை மற்றவர்களை எடுக்கவைக்காதீர்கள்” என தெரிவித்திருந்தார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: பிக் பாஸ் வீட்டை விட்டு இந்தவாரம் வெளியேறும் நபர் இவர்தான்? இணையத்தில் வைரலாகும் தகவல்!

தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் மூலம் தான் கற்றுக்கொண்ட விஷயம் குறித்து ராஷ்மிகா மந்தனா பேச்சு :

அந்த நேர்காணலில் பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து பேசிய ராஷ்மிகா மந்தனா, ” உங்களுக்கான முடிவை நீங்களே எடுங்கள், தி கேர்ள்ஃபிரண்ட் படம் பாலினப் போராட்டங்களைப் பற்றியது அல்ல, சுய மதிப்பு மற்றும் தேர்வு பற்றியது. மேலும் இந்த படத்தில் ஒரு பெண் தன்னது மனதிற்குள் சண்டையிட்டு, எப்படி அவளை வெளிகொண்டுவருகிறாள், என்பதுதான். அதை அவள் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: காந்தா படத்துக்கு பிறகு துல்கர் சல்மான் நடித்துவரும் படம் இதுதான்.. அவரே சொன்ன விஷயம்!

ஒரு நாளின் முடிவில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று முடிவு செய்வது நீங்கள்தான். உறவுகள் மிகவும் முக்கியமானதுதான், உங்களுக்கு அந்த உறவு தேவையில்லை என்றால் நீங்கள் அதிலிருந்து வெளியே செல்லமுடியும். மற்றவர்கள் உங்களுக்கான முடிவை எடுக்கமுடியாது. அதை செய்யாதீர்கள். உங்களுக்கான விஷயங்களை நீங்களே முடிவு செய்யுங்கள்” என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.

உறவுகள் குறித்து ராஷ்மிகா மந்தனா பேசிய வீடியோ பதிவு :

ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள்ஃபிரண்ட் படமானது நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் படத்தின் கதையை பாராட்டிவருகின்றனர். மேலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்தை பார்த்து, ராஷ்மிகா மந்தனாவிற்கு தேசிய விருது கொடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.