Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வா வா என் தேவதையே… பிரேம்ஜி அமரன் – இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

Premgi Amaren Blessed With Baby Girl: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரேம்ஜி அமரன். இவருக்கு சமீபத்தில் இந்து என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வா வா என் தேவதையே… பிரேம்ஜி அமரன் – இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
பிரேம்ஜி அமரன் - இந்துImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Nov 2025 21:22 PM IST

இசை உலகில் கடவுளாக ரசிகர்களால் போற்றப்படும் நபர் தான் இசையமைப்பாளர் இளையராஜா (Ilaiyaraaja). இவர் சினிமாவில் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் தற்போதும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இளையராஜாவின் தம்பியாக சினிமாவில் அறிமுகம் ஆனவர்தான் கங்கை அமரன். இவர் பார்ப்பதற்கு இளையராஜா மாதிரியே இருக்கும் காரணத்தால் மக்களில் பலர் கங்கை அமரனை இளையராஜா என்று கூட நினைத்தது உண்டு. இந்த குழப்பம் ரசிகர்களிடையே மட்டும் இல்லாமல் திரையுலகில் உள்ள பிரபலங்களிடையே கூட உள்ளது என்று பலர் தெரிவித்து உள்ளனர். முதல் தலைமுறையில் இவர்கள் இருவரும் சினிமாவில் சாதித்ததை தொடர்ந்து இவர்களின் வாரிசுகளும் தொடர்ந்து சினிமாவில் இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர் என தற்போது இரண்டாவது தலைமுறையினராக சாதித்து வருகின்றனர். மேலும் இந்த சினிமா குடும்பத்தினருக்கு ரசிகர்களின் எண்ணைக்கையும் அதிகம் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் கங்கை அமரனின் இரண்டு மகன்களில் ஒருவர் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றொருவர் நடிகரும் பாடகருமான பிரேம்ஜி அமரன் ஆவர். இவர்களை சினிமா வட்டாரங்களில் மட்டும் இன்றி ரசிகர்களும் கலாய்க்கும் வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது தம்பி பிரேம்ஜி இல்லாமல் ஒரு படத்தை கூட இயக்கியது இல்லை. அதன்படி இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் தொடர்ந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் பிரேம்ஜி நடித்து வருகிறார். தொடர்ந்து எலிஜிபில் பேச்சுளராக வலம் வந்த பிரேம்ஜிக்கு கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.

பிரேம்ஜி – இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது:

அதன்படி காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் பிரேம்ஜியின் மனைவி இந்து கர்பமாக இருக்கும் செய்தி வெளியாகி அவர்களின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் இன்றி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read… அது நான் இல்லை… என் போன் நம்பரும் இல்லை – ஸ்ரேயா சரண் பெயரில் நடந்த மோசடி!

இந்த நிலையில் நடிகர் பிரேம்ஜி – இந்து தம்பதிக்கு இன்று 10-ம் தேதி நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தியைக் கேட்ட பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read… யூடியூபில் பட்டையை கிளப்பும் சூர்யாவின் காட்மோட் பாடல்!