காமெடி – செண்டிமெண்ட் பாணியில் தமிழில் வெப் சீரிஸ் பார்க்கனுமா? அப்போ இந்த ஸ்வீட் காரம் காஃபி வெப் சீரிஸை மிஸ் செய்யாதீர்கள்
Sweet Kaaram Coffee Web Series: ஓடிடி தளங்களில் மக்கள் தொடர்ந்து படங்களைப் பார்க்க ஆர்வம் தெரிவித்து வருவது போல இணையதள தொடர்களையும் பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழில் பெரிய அளவில் இணையதள தொடர்கள் வரவில்லை என்றாலும் சில தொடர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஓடிடியில் இணையதள தொடர்கள் தொடர்ந்து பல மொழிகளில் வெளியாகி வருகிறது. மற்ற மொழிகளில் வெளியாகும் இணையதள தொடர்கள் பல ஹிட் தொடர்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து ஒளிபரப்பி வருகின்றனர். மேலும் தமிழில் நேரடியாக உருவான இணையதள தொடர்கள் குறைவு என்றாலும் அது ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி 2023-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியான இணையதள தொடர்தான் ஸ்வீட் காரம் காஃபி. இந்த இணையதள தொடரை ரேஷ்மா கட்டாலா, சுவாதி ரகுராமன், வினித்ரா மாதவன் மேனன், கிருஷ்ணசாமி ராம்குமார், சிவா ஆனந்த் ஆகியோர் இணைந்து எழுதி இருந்தனர். மேலும் பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, சுவாதி ரகுராமன் ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தனர்.
மேலும் இந்த தொடரில் நடிகர்கள் லக்ஷ்மி, மது, சந்தியா பாலசந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பாலா சுரேஷ், கவின் ஜெய் பாபு, தேவ் ராம்நாத், வம்சி கிருஷ்ணா, சம்யுக்தா விஸ்வநாதன், அலெக்ஸ் ஓ’நெல், ஆயிஷா கபூர், ரஞ்சினி பிரபு, சமீர் மல்ஹோத்ரா, ரித்விக் பௌமிக், கணேஷ் வெங்கட்ராமன், பத்மாவதி ராவ், அம்ருதா சீனிவாசன், எம்.ஜே. ஸ்ரீராம் என பலர் இந்த இணையதள தொடரில் நடித்து இருந்தனர்.
ஸ்வீட் காரம் காஃபி தொடரின் கதை என்ன?
அதன்படி ஒரே வீட்டில் ஒன்றாக வாழும் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று பெண்கள் தங்களின் வாழ்க்கையை மிகவும் சுதந்திரமாக தங்களுக்கான முடிவை தாங்களே எடுத்துக்கொண்டு வாழும் ஒரு வாழ்க்கை வாழ்வதற்காக வீட்டை விட்டு வெளியே செல்வார்கள். தொடர்ந்து பெண்கள் என்றாலே அவர்களுக்கு கடமைகள் என்று அவர்கள் மீது சுமத்தப்படும் சுமைகளை எல்லாம் இறக்கி வைத்துவிட்டு வெளியே சுதந்திரமாக பறக்க நினைக்கும் பெண்களின் கதை தான் இது.
Also Read… ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்தின் ரிலீஸ் எப்போது? மாஸான ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு
அதன்படி நடிகர்கள் லக்ஷ்மி மற்றும் அவரது மருமகள் மது அவர்களுடன் லக்ஷ்மியின் பேத்தி சந்தியா பாலசந்திரன் ஆகிய மூன்று பேரும் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறுவார்கள். ஒரு வாரம் முழுக்க இந்தியாவின் பல பகுதிகளுக்கு சுற்றிப்பார்க்க சென்ற அவர்கள் தங்களின் வாழ்க்கையில் இதுவரை மிஸ் செய்த அனைத்து சுதந்திரத்தையும் மிகவும் மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள். காமெடி ஃபீல் குட் என அனைத்தும் கலந்த இந்த தொடர் மொத்தம் 8 எபிசோடுகளைக் கொண்டுள்ளது. இது தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.



