நான்லா லவ் பண்ணேன்னா மொத்த டெல்லியையே எரிச்சுடுவேன் – வெளியானது தேரே இஸ்க் மெய்ன் படத்தின் தமிழ் ட்ரெய்லர்
Tere Ishk Mein Trailer Tamil | நடிகர் தனுஷ் நடிப்பில் இந்தி சினிமாவில் உருவாகி தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கும் படம் தேரே இஸ்க் மெய்ன். இந்தப் படத்தின் இந்தி ட்ரெய்லர் முன்னதாகவே வெளியான நிலையில் தற்போது தமிழ் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் இறுதியாக நடித்து இயக்கிய படம் இட்லி கடை. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தொடர்ந்து இந்தி படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். அதன்படி நடிகர் தனுஷ் தற்போது பாலிவுட் சினிமாவில் நடித்துள்ள படம் தேரே இஸ்க் மெய்ன். இந்தப் படத்தை இயக்குநர் ஆனாந்த் எல் ராய். இந்தி சினிமாவில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தான் நடிகர் தனுஷை அறிமுகப் படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளியான ராஞ்சனா என்ற படத்தின் மூலமாகதான் நடிகர் தனுஷ் இந்தி சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தியிலும் நடிகர் தனுஷ் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள தேரே இஸ்க் மெய்ன் படம் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




தேரே இஸ்க் மெய்ன் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியானது:
அதன்படி தேரே இஸ்க் மெய்ன் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் கிருத்தி சனோன், பிரபு தேவா, சுஷில் தஹியா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் வருகின்ற 28-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் இந்தி ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
Also Read… பிக்பாஸில் என்னோட காம்பெடிஷன் இவர் தான் – பார்வதி சொன்னது யார் தெரியுமா?
தேரே இஸ்க் மெய்ன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
வழங்குகிறோம் ஆனந்த் L ராயின் பிரம்மாண்ட உலகின் டிரெய்லர் – தியேட்டர்களில் 2025 நவம்பர் 28 அன்று. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில்.❤️🔥#TerelshkMein Tamil trailer out now: https://t.co/FDxVpDyI1H@dhanushkraja @kritisanon @arrahman @aanandlrai #BhushanKumar #HimanshuSharma… pic.twitter.com/hd9KwbAevD
— T-Series (@TSeries) November 18, 2025
Also Read… ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வைரலாகும் தகவல்