Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Bigg Boss : குப்பை தொட்டியில் என்ன இருக்குனு ஆராய்ச்சி பண்றங்க… ரெட் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி!

Bigg Boss Season 9 Tamil promo: ஆண்டுதோறும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த 2025ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சி தொடங்கி 6 வாரமாகிவிட்டது. இந்நிலையில் இன்று 41வது நாளில் வெளியான முதல் ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Bigg Boss : குப்பை தொட்டியில் என்ன இருக்குனு ஆராய்ச்சி பண்றங்க… ரெட் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி
Barath Murugan
Barath Murugan | Published: 15 Nov 2025 15:04 PM IST

தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்துவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil). இந்த நிகழ்ச்சியானது கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் ஆரம்பமான நிலையில், இன்றுடன் 41 நாட்களாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வழங்கும் நிலையில், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் வார இறுதியான இன்று , இந்த வீட்டில் யார் விஜய் சேதுபதியிடம் வசமாக சிக்கிக்கொள்கிறார்கள், மற்றும் யார் இந்த பிக்பாஸ் சீசன் 9 வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்பது தொடர்பான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இருந்துவருகிறது. அந்த வகையில் இன்று 2025 நவம்பர் 15ம் தேதியில் வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி, ரெட் கார்டுடன் வந்துள்ளார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் எந்த நபருக்கு ரெட் கார்ட் (Red card) கிடைக்கும் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

மற்ற சீசன்களை ஒப்பிடும்போது, இந்த சீசன் 9 தமிழில் அனைத்து போட்டியாளர்களும் ஒரே போல விளையாடுவது போலத்தான் இருக்கிறது. இந்நிலையில் இன்று ரெட்கார்ட் கிடைக்க அதிக வாய்ப்பு போட்டியாளர்களாக சபரி, சாண்டரா அல்லது பிரஜினுக்கு கிடைக்கிறதா? என்பது தெரியவில்லை. மேலும் இந்தவாரத்தில் கனி திரு (Kani Thiru)பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: சுந்தர் சி-யின் கருத்து… எனது நட்சத்திரம் விரும்பும் கதையை எடுப்பதுதான் எனக்கு நன்மை – கமல்ஹாசன் பேச்சு!

பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியில் 41வது நாளின் முதல் முதல் ப்ரோமோ பதிவு :

சபரி மற்றும் சாண்ட்ராவின் நடுவே வெடித்த பிரச்னை :

சபரி மற்றும் சாண்ட்ரா நடுவே அவ்வப்போது சில பிரச்னைகள் இந்த பிக்பாஸ் வீட்டில் நடைபெற்றுவருகிறது. இதில் சாண்ட்ராவின் பல்துலக்கும் பிரஷை யாரோ சிங்க்கில் போட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது யார் அதில் போட்டார் என கேள்வி எழுந்த நிலையில், சாண்ட்ரா மற்றும் சபரி நடுவே இந்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருந்தது.

இதையும் படிங்க: ஒரே பொண்ணு பொண்ணு.. வாட்டர்மெலான் ஸ்டார் காதல் தொல்லை… பிக்பாஸ் வீட்டில் அரோரா வைத்த கோரிக்கை!

மேலும் குப்பை தொட்டியில் சாண்ட்ராவின் பிரஷ் வேறு ஒருவரின் பிரஷ் இருந்ததாகவும் காட்டப்படுகிறது. இதில் யார் மீது தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் சாண்ட்ரா, சபரியை குற்றம் சாட்டுவது போல பேசியுள்ளார். மேலும் பிரஜினும் சாண்ட்ராவுடன் இணைந்து சபரியை குறித்து அவதூறாக பேசுவது போன்ற வீடியோவும் தற்போது ஊடகங்களில் வைரலாகபரவி வருகிறது.