ஒரே பொண்ணு பொண்ணு.. வாட்டர்மெலான் ஸ்டார் காதல் தொல்லை… பிக்பாஸ் வீட்டில் அரோரா வைத்த கோரிக்கை!
Aurora Exposes Diwakar: தமிழில் சிறப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியாக வெளியாகிவருவது பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 40 நாட்களை கடந்த நிலையில், தொலைக்காட்சியில் சிறப்பாக வெளியாகிவருகிறது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஓவர்ஸ்ட் போட்டியாளராக திவாகரை தேர்ந்தெடுக்க அரோரா சொன்ன காரணம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக்பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது கடந்த 2017ம் ஆண்டு முதல் வெளியாகிவரும் இந்த நிகழ்ச்சியானது மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இதுவரை மொத்தமாக 8 சீசன்கள் வலியாகியிருந்த நிலையில், கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கிய நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil). இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் நிலையில், மொத்தமாக 20 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் முதல் 3 வாரத்தில் 4 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், 4வது வாரத்தில் வைல்ட் கார்ட் எண்டரி போட்டியாளர்களும் உள்ளே வந்தனர். வைல்ட் கார்ட் எண்டரி (Wildcard entry) நுழைந்ததிலிருந்து, இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியானது சூடுபிடிக்க தொடங்கியது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது தொடங்கி இன்று 2025 நவம்பர் 14ம் தேதியுடன் 41வது நாட்களான நிலையில், நேற்று இந்த வாரத்திற்கான ஓவர்ஸ்ட் போட்டியாளர்கள் யார் என தேர்வு செய்யப்பட்டிருந்தது. இதில் வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் (Watermelon Star Diwakar) மற்றும் கனியை (Kani) மற்ற போட்டியாளர்கள் நாமினேட் செய்திருந்தனர். இதில் திவாகரை முக்கியமாக நாமினேட் செய்த காரணத்தை அரோரா (Aurora Sinclair) வெளிப்படையாக சொன்ன விஷயம் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்… பிக்பாஸில் பார்வதியின் அடுத்த சண்டை – வைரல் வீடியோ இதோ
திவாகர் குறித்து அரோரா சொன்ன விஷயம் தொடர்பான வீடியோ :
Aurora👏👏👏
The only girl who called out that melon’s filthy behaviour!!#BiggBossTamil #BiggBossTamil9 pic.twitter.com/sJ4kr0jGBJ— Prabhakar (@itz_Prabhaa) November 15, 2025
இந்த வாரத்தின் ஓவர்ஸ்ட் போட்டியாளர்களுக்கான நாமினேஷன் முடிந்ததும் மீண்டும் பேசிய அரோரா, “வாட்டர்மெலான் ஸ்டார் திவாகரை இதற்க்கு முக்கியமான நாமினேட் செய்த காரணம், அவரு பொண்ணு பொண்ணு என இந்த் வாரம் முழுக்க அவரு அதைத்தான் செய்திருக்காரு. நிறையதடவை என்னை பற்றி தவறான விஷயத்தை சொல்லிருக்காரு, அதை அவரிடம் நானும் சொல்லினேன் அதன் பின் நிறுத்திட்டாரு.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் அந்த படத்தை 100 தடவை பார்த்திருக்கிறேன்… அவருக்கு கால் பண்ணி பேசினேன்- ஜான்வி கபூர்!
மேலும் அவருக்கு பெண்கள் மற்றும் லவ் தொடர்பான டாஸ்க் அதிகமாக கொடுக்கப்படுகிறது. அவர் டாஸ்க் இல்லாமலே அதைத்தேன் செய்கிறார். அவர் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தினால் தான் இங்க வந்திருக்காரு. ஆனால் அதை தாண்டி பல விஷயங்களை செய்கிறார்” என அரோரா கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் திவாகர் மீது அரோரா வைத்த கருத்தையும் பலரும் ஆதரிக்கும் விதத்தில் தங்களின் கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.