Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இது ஃபன் டாஸ்கா? இல்ல வன்மம் டாஸ்கா? – வைரலாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி 6 வாரங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 7-வது வாரம் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்கை பிக்பாஸ் அளித்துள்ள நிலையில் வீடு கலேபரமாக உள்ளது.

இது ஃபன் டாஸ்கா? இல்ல வன்மம் டாஸ்கா? – வைரலாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Nov 2025 19:52 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தொடர்ந்து போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் பல டாஸ்குகளை வழங்கி வருகிறார். ஒவ்வொரு டாஸ்கிலும் தொடர்ந்து போட்டியாளர்கள் இடையே சண்டைகள் மட்டுமே நடந்து வருகிறது. முந்தைய 8 சீசன்களில் இல்லாத அளவிற்கு இந்த 9-வது சீசனில் போட்டியாளர்கள் இடையே வன்மமும் கோபமுமே அதிகமாக உள்ளது. தொடர்ந்து முந்தைய சீசன்களில் போட்டியாளர்கள் இடையே ஒரு அன்பு மற்றும் நட்பு இருக்கும். ஆனால் இந்த போட்டி தொடங்கியதில் இருந்தே போட்டியாளர்கள் அனைவரும் நடிப்பு மட்டுமே காட்டுகிறார்கள். அன்பாக இருப்பது போலவும் நட்பாக இருப்பது போலவும் தொடர்ந்து முதுகில் குத்தும் வேலையை பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் செய்து வருகிறார்கள். இது ரசிகர்களிடையே நெகட்டிவ் விமர்சனத்தை மட்டுமே அளித்து வருகிறது.

தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டு இருக்கும் இந்த போட்டியாளர்களால் நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு அதிருப்த்தி நிலவும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவும் தொடர்ந்து இது ஒரு ஃபன் டாஸ்க் என்று அளித்தாலும் அதிலேயும் சண்டையை மட்டுமே போட்டு வருகிறார்கள் போட்டியாளர்கள். இதனை மாற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. இந்த நிலையில் இந்த வாரமும் ஒரு ஃபன் டாஸ்கை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு அளித்துள்ளது. ஆனால் அதிலும் போட்டியாளர்கள் அவர்களின் மனதில் இருக்கும் வன்மத்தை மட்டுமே தொடர்ந்து கொட்டித்தீர்க்கின்றனர்.

இது ஃபன் டாஸ்கா? இல்ல வன்மம் டாஸ்கா?

அதன்படி இன்றைய எபிசோடிற்கான மூன்றாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் கானா வினோத் காமெடியாக பேசுவது போல பார்வதியிடம் அவர் செய்யும் செயல்களை முதலில் தெரிவிக்கிறார். அதனைத் தொடர்ந்து பார்வதி அரோராவிடம் பேசும் போது கம்ருதின் மற்றும் அரோரா மீதான தனது வன்மத்தை சிரித்துக்கொண்டே கூறுகிறார். இதனை அரோராவும் சிரித்துக்கொண்டே கேட்டு பதிலளிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்ஹ்த்டு வருகின்றது.

Also Read… மணிரத்னத்தினத்தின் படம் குறித்து அப்டேட் சொன்ன தமிழ் பிரபா – உற்சாகத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Also Read… பைசன் படத்திலிருந்து வெளியானது தென்னாடு பாடல் வீடியோ