Watermelon Star Diwakar: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வாட்டர்மெலான் ஸ்டார்.. கண்ணீருடன் அனுப்பிவைத்த பார்வதி!
Vijay Sethupathi Bigg Boss Promo: கடந்த 2025 அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 9 தமிழ். தற்போது இன்று வெளியான 3வது ப்ரோமோவிலே வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் வெளியேறுவதாக பிக்பாஸ் குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இந்தியா அளவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது முதலில் இந்தியில் தொடங்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் தமிழ் என பல்வேறு மொழிகளிலும் ஆரம்பமாகியது. அந்த வகையில் தமிழில் இதுவரை மொத்தமாக 8 சீசன்கள் வெளியான நிலையில், தற்போது இந்த 2025ம் ஆண்டில் பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil) நிகழ்ச்சியானது நடைபெற்றுவந்தது. சுமார் 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, 6 வரங்களை கடந்தது சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடந்திருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் மீது பல புகார்கள் எழுந்துவருகின்றன. இந்நிலையில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வந்த பிறகு இந்த நிகழ்ச்சியின் போக்கு மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சினையானது இன்றுடன் 42வது நாளை கடந்துள்ளது.
ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியாளர்களை விஜய் சேதுபதி (Vijay Sethupathi) சந்திப்பது வழக்கம். அவர் சந்திக்கும்போது இந்த வாரத்தில் நடந்த விஷயங்கள் மற்றும் போட்டியாளர்கள் செய்த தவறுகள் குறித்து பேசுவார். அந்த வகையில் 6வது வாரத்தின் இறுதி நாளான இன்று, இந்த நிகழ்ச்சியிலிருந்து வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் (Watermelon Star Diwakar) வெளியேறியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோவை பிக்பாஸ் குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: பிக் பாஸ் வீட்டை விட்டு இந்தவாரம் வெளியேறும் நபர் இவர்தான்? இணையத்தில் வைரலாகும் தகவல்!
பிக் பாஸ் சீசன் 9ன் தமிழின் 42வது நாளின் 3வது ப்ரோமோ வீடியோ :
#Day42 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/2APucBr3QQ
— Vijay Television (@vijaytelevision) November 16, 2025
இதுவரை எந்த சீசனிலும் இல்லாதது போல, இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியில் ப்ரோமோ வீடியோவில் இந்த வாரத்தில் யார் வெளியேறுகிறார் என்பதை அறிவித்துள்ளனர். இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியில் 6வது வாரத்தில் வாட்டர்மெலான் திவாகர் வெளியேறியுள்ளார். இவரின் வெளியேற்றத்திற்கு விஜே பார்வதி கண்ணீருடன் வழியனுப்பியுள்ளார். மேலும் அவர் அதில், நீங்கள் இல்லாமல் எப்படி நான் இருக்கப்போகிறேன் என்று கூறுவது போன்ற வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: காதல் என்றால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?.. ரசிகரின் கேள்விக்கு பதிலை கொடுத்த தனுஷ்!
மேலும் இந்த ப்ரோமோ வீடியோவில் வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர், விஜய் சேதுபதியை சந்தித்து அவரிடம் நகைச்சுவையாக பேசியது போன்ற காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.