Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கொலவெறி பாடல் இப்படிதான் உருவானது… தனுஷ் ஓபன் டாக்

Actor Dhanush about Kolaveri song: நடிகர் தனுஷ் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தப் படம் 3. இந்தப் படத்தில் இருந்து வெளியான கொலவெறி பாடல் உலகம் முழுவதும் மாபெறும் வரவேற்பைப் பெற்றது குறித்து தனுஷ் வெளிப்படையாக பேசியுள்ளார்.

கொலவெறி பாடல் இப்படிதான் உருவானது… தனுஷ் ஓபன் டாக்
தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Nov 2025 11:45 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் வெற்றிப் பெற்று வருகிறது. மேலும் கோலிவுட் சினிமாவில் இவர் நடிகராக அறிமுகம் ஆன போது இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என்று பலர் கேளி செய்துள்ளனர். கேளி செய்தவர்கள் எல்லாம் வாயடைத்துப் போகும் அளவிற்கு தனது திறமையால் ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவைப் பிரபலப்படுத்தினார். இப்படி உலக அளவில் பிரபலமாக்கிய தனுஷ் தனது திறமையால் தற்போது சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி மற்ற மொழிப் படங்களிலும் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக இட்லி கடை படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இந்தப் படத்தை நடிகர் தனுஷே இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்தி மொழியில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள தேரே இஸ்க் மெய்ன் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகை கிருத்தி சனோன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் படம் வருகின்ற 28-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கொலவெறி பாடல் குறித்து ஓபனாக பேசிய தனுஷ்:

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் அவரது நடிப்பில் வெளியான 3 படத்தில் இருந்து கொலவெறி பாடல் உருவானது எப்படி என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் தனுஷ் கொலவெறி பாடலை காமெடியாகதான் உருவாக்கினோம். ஒரு நாள் ரேண்டமா பாடல் குறித்து யோசிக்கும் போது இப்படி ப்ளான் பண்ணோம்.

இந்தப் பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலம் ஆகும்னு நினச்சோம். ஆமா தமிழ் மிகவும் பழமையான மொழி இந்த உலகத்தில். ஆனால் அந்தப் பாடலில் தங்கிலீஷ் மூலம் உருவாக்கியதால் அது உலக அளவில் இந்தப் பாடலைப் பிரபலப்படுத்தியது என்று தனுஷ் வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் அந்தப் பாடல் வெளியாகி தற்போது 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் யூடியூபில் தற்போது 559 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… லோகாவின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து புதுப் படத்தில் கமிட்டான கல்யாணி பிரியதர்ஷன்!

இணையத்தில் கவனம் பெறும் தனுஷின் பேச்சு:

Also Read… சூர்யாவிற்கு கதை சொன்ன சூர்யாஸ் சாட்டர்டே பட இயக்குநர் – உற்சாகத்தில் ரசிகர்கள்