சிவகார்த்திகேயன் ரசிகர்களே உங்களுக்கான ஹேப்பி நியூஸ்.. மாவீரன் 2 படம் குறித்து வெளியான அப்டேட் இதோ!
Maaveeran 2 Update: தமிழில் பிரபல கதாநாயகனாக கலக்கிவருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 24 படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இதனை தொடர்ந்து புது புது படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். இந்நிலையில் மாவீரன் படத்தின் பாகம் 2 குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). இந்த திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, டான் பிக்ச்சர் நிறுவனம் இணைந்து நடித்திருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகர்கள் ஸ்ரீலீலா, ரவி மோகன் அதர்வா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திரிருந்தனர். கடந்த 2025 ஜனவரியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது தாய் கிழவி (Thaai Kizhavi) பட இயக்குநர் சிவகுமார் முருகேசனுடன் புது படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு படக்குழு சேயோன் (Seyon) என டைட்டில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் திரைப்படம் மாவீரன் 2 (Maaveeran 2) .
இதை இயக்குநர் மடோன் அஷ்வின் (Madonne Ashwin) இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான படம்தான் மாவீரன். இப்படத்தின் பாகம் 2 எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: நீங்கள் இதுவரை பார்த்திராத வகையில்.. விஸ்வநாத் & சன்ஸ் படம் குறித்து வெங்கி அட்லூரி!
சிவகார்த்திகேயனின் மாவீரன் 2 திரைப்படத்தின் அப்டேட் :
யோகி பாபுவின் மண்டேலா படத்தை இயக்கியதன் மூலம் தமிழில் இயக்குநராக நுழைந்தவர் மடோன் அஷ்வின். இவர் இதையடுத்து தான் இயக்கத்தில் 2வது இயக்கியிருந்த படம்தான் மாவீரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஸ்கின் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதையும் படிங்க: சினிமாவில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரியோ ராஜ் – வெளியானது அறிவிப்பு
தற்போது இதன் பார்ட் 2 படம் பற்றிய அப்டேட்டை வெளியாகியுள்ளது. இயக்குநர் மடோன் அஷ்வின், தற்போது மாவீரன் 2 படத்தின் கதையை எழுத தொடங்கியுள்ளாராம். இது தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
மாவீரன் 2 படம் குறித்து இணையத்தில் வைரலாகிவரும் பதிவு:
BUZZ – #Maaveeran2 has entered writing ✍️ stage Madonne Ashwin is making use all his time to shape up #Maaveeran sequel 💥🔥
Is #Sivakarthikeyan returning ? pic.twitter.com/wuhN4hvWee
— Movies Singapore (@MoviesSingapore) February 28, 2026
இயக்குநர் மடோன் அஷ்வின் சியான் விக்ரமின் கூட்டணியில் புது இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், இப்படமானது அடுத்தகட்டத்துக்கு நகரவே இல்லை. இதன் காரணமாகத்தான் மாவீரன் 2 படத்தில் கதையை இயக்குநர் மடோன் அஷ்வின் எழுத தொடங்கியுள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.