Thaai Kizhavi: தாய் கிழவி பட வாய்ப்பு.. சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த பாலா சரவணன்!
Bala Saravanan Thanks To Sivakarthikeyan: தமிழில் சின்னத்திரை சீரியல்களில் துணை கதாபாத்திரமாக நடித்துவந்தவர் பாலா சரவணன். இவர் சமீபத்தில் வெளியான தாய் கிழவி படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் வாய்ப்பிற்காக சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழில் கடந்த 2026 பிப்ரவரி 27ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் தாய் கிழவி (Thaai Kizhavi). இதில் நடிகை ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar) கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் முற்றிலும் கிராமத்து கதைக்களத்தில் வெளியான இந்த திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தயாரித்திருந்தார். இந்த படாமனது பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு வெளியாகியிருந்த நிலையில், திரையரங்குகளில் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் இருந்துவருகிறது. இப்படத்தில் ராதிகா சரத்குமாருடன் நடிகர்கள், முனீஸ்காந்த், இளவரசு, பாலா சரணவன் (Bala saravanan) மற்றும் சிங்கம் புலி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.
தற்போது இப்படம் திரையரங்குகளில் வெளியாகிவரும் நிலையில், மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர் பாலா சரவணன், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: மஞ்சுமல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு
தாய் கிழவி பட வாய்ப்பிற்காக நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்ட பாலா சரவணன்:
மிக சிறப்பான இயக்குனரை நல்ல மனிதனை @Dir_SivakumarM ஐ எனக்கு அறிமுகம் செய்து தரமான மிக அவசியமான #Thaaikizhavi படத்தில் மிக சிறப்பான வாய்ப்பை தந்த உங்கள் பேரன்பிற்கும் இம்மாபெரும் வெற்ற்றிகள் அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல அன்பிற்கு அன்பான @sivakarthikeyan தலைவரே…… pic.twitter.com/ZMexIvWMy6
— Bala saravanan actor (@Bala_actor) March 2, 2026
அந்த பதிவில் நடிகர் பாலா சரவணன், “மிகவும் சிறப்பான இயக்குநர் மற்றும் நல்ல மனிதர் சிவகுமார் முருகேசன். இவரின் அறிமுகம் மிகவும் சிறப்பானது. மேலும் தாய் கிழவி படத்தில் நடிக்க வாய்ப்பு தந்து, பேரம்பிற்கும் மற்றும் வெற்றிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன் தலைவரே” என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நீங்கள் இதுவரை பார்த்திராத வகையில்.. விஸ்வநாத் & சன்ஸ் படம் குறித்து வெங்கி அட்லூரி!
தாய் கிழவி பட வசூல் :
ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. முற்றிலும் மதுரை சுற்றுவட்டார மற்றும் பெண்ணை மையமாக கொண்ட கதைக்களத்தில் இப்படம் தயாராகியுள்ள நிலையில், எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. தற்போது திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 3 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இப்படமானது வெளிநாடுகளில் 3 நாட்கள் முடிவில் இதுவரை ரூ 5.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அஹிம்சா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.