kavin: பொழுதுபோக்கை பொழுதுபோக்காக மட்டும் பாருங்க.. மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த கவின்!
Kavin Speech: தமிழ் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கவின் ராஜ். இவரின் நடிப்பில் வரும் 2025 நவம்பர் 21ம் தேதியில் வெளியாகி காத்திருக்கும் படம்தான் மாஸ்க். இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக சமீபத்தில் கல்லூரி ஒன்றில் கலந்துகொண்ட இவர், அந்த நிகழ்ச்சியின் போது மாணவர்களுக்கு சினிமா குறித்து அட்வைஸ் கொடுத்துள்ளார்.
நடிகர் கவின் ராஜ் (Kavi Raj) ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார். சரவணன் மீனாட்சி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், இதை தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். தொடக்கத்தில் இவர் நடித்த படங்களுக்கு அந்த அளவிற்கு வரவேற்புகள் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 3 (Bigg Boss Season 3) நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து லிப்ட் (Lift) என்ற படம் இவருக்கு ஓரளவு நல்ல பிரபலத்தை கொடுத்திருந்தது. தொடர்ந்து டாடா (Dada) மற்றும் ஸ்டார் (Star) போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருந்தார். அந்த வகையில் இவரின் நடிப்பில் ரிலீஸிற்கு காத்திருக்கும் படம்தான் மாஸ்க் (Mask). இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) தயாரிக்க, அறிமுக இயக்குநர் விகர்ணன் (Vikarnan) இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் ரிலீஸ் தொடர்பாக, சமீபத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் ப்ரோமோஷன் பணிக்காக நடிகர் கவின் ராஜ் சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியின்போது மாணவர்களின் முன்னிலையில் பேசிய அவர், சினிமா குறித்து கல்வி குறித்தும் அட்வைஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.




இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… ஜன நாயகன் படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
சினிமா மற்றும் கல்வி குறித்து மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்து கவின் ராஜ் :
அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கவின், “என்னுடைய மாஸ்க் திரைப்படம் விரைவில் வெளியாகிறது. என்னுடைய படம் ரிலீஸ் அன்று எல்லோருக்கும் கல்லூரி இருக்கும் என நினைக்கிறேன். அப்ப என்ன பண்ணனும், சமத்தாக எல்லோரும் காலேஜ் வரணும். அன்னைக்குரிய உங்களுடைய வேலையை முடிக்கணும். சனி கிழமை, ஞாயிற்றுக்கிழமை லீவ் அன்னைக்கு கூட தியேட்டர்போய் பாருங்க. ஒரு பிரச்சனையும் இல்லை.
இதையும் படிங்க: விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 46 படத்தின் ஷூட்டிங் – வைரலாகும் முக்கிய தகவல்
மற்றபடி ஒன்றும் இல்லை. படம் என்பது ஒரு பொழுதுபோக்கு அவ்ளோதான். ஒரு பொழுதுபோக்கு தேவைப்படும்போது, அதை பாருங்க, தேவை இல்லாதபோது அதிலிருந்து வெளியேறுங்க. பொதுப்போக்கு பொழுதுபோக்காக இருக்கும் நரை நல்லது, அவ்ளோதான்” என அதில் மாணவர்களுக்கு சினிமா மற்றும் கல்வியை குறித்து அட்வைஸ் கொடுக்கும் விதத்தில் அவர் பேசியிருந்தார்.
மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்து நடிகர் கவின் ராஜ் பேசிய வீடியோ பதிவு :
“#MASK is releasing on Friday. Don’t bunk the college, Finish your college duties on Friday & watch the film on Saturday/Sunday. Cinema is just an entertainment”
– #Kavin 👏👏pic.twitter.com/WEBlSNj4Fi— AmuthaBharathi (@CinemaWithAB) November 20, 2025
கவினின் இந்த மாஸ்க் படமானது வரும் 2025 நவம்பர் 21ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். இந்த படமானது ஒரு கொள்ளை கும்பல் தொடர்பான கதைக்களத்தில், அமைந்துள்ள நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், திரையரங்குகளில் பார்வையாளர்களிடையே ஈர்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.