தகாத வார்த்தைகளை பயன்படுத்திய இயக்குநர்… நடிகை திவ்ய பாரதி காட்டம்
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நடிகை திவ்ய பாரதி. இவர் தற்போது தெலுங்கு சினிமாவிலும் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு இயக்குநர் தன்னை தவறாக பேசியது குறித்து நடிகை திவ்யபாரதி காட்டமனா பதிலை அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான முப்பரிமானம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை திவ்ய பாரதி. இவர் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கவில்லை என்றாலும் இவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு வெளியான பேச்சுளர் படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகை திவ்ய பாரதி. இயக்குநர் சதீஷ் செல்வகுமார் எழுதி இயக்கி இருந்தார். மேலும் நடிகரும் இயக்குநருமான ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை திவ்ய பாரதி குறித்து சில சர்ச்சைகளும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் கேமியோ ரோலில் நடித்த நடிகை திவ்ய பாரதி இறுதியாக தமிழ் சினிமாவில் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான கிங்ஸ்டன் படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் இரண்டாவது முறையாக ஜிவி பிரகாஷ் உடனே நடிகை திவ்ய பாரதி நடித்தது அவர்கள் இடையே காதல் இருப்பதாக வதந்தி கிளம்பியது. இதுகுறித்து நடிகை வெளிப்படையாக பேசி இருந்தார். எங்களுக்குள் எந்தவிதமான உறவும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.
தகாத வார்த்தைகளை பயன்படுத்திய தெலுங்கு இயக்குநர்:
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் கோட் என்ற படத்தில் நடிகை திவ்ய பாரதி கமிட்டாகி நடித்து வந்தார். இந்தப் படத்திற்கு முதலில் நரேஷ் குப்பிலி என்பவர்தான் இயக்குநராக பணியாற்றி உள்ளார். படப்பிடிப்புத்தளத்தில் நடிகை திவ்ய பாரதிக்கும் நரேஷ் குப்பிலிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இயக்குநர் நரேஷ் குப்பிலி அந்தப் படத்தில் இருந்து நீக்கிவிட்டு தயாரிப்பாளரே அந்தப் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் நரேஷ் குப்பிலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கோட் படம் குறித்தும் நடிகை திவ்ய பாரதி குறித்தும் மறைமுகமாக சாடியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை திவ்ய பாரதி அவரது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.




Also Read… தனுஷ் – தமிழரசன் பச்சைமுத்து கூட்டணியை உறுதி செய்த படக்குழு – வைரலாகும் பதிவு!
அதில் திவ்ய பாரதி கூறியுள்ளதாவது, எனக்கு அணிகளுடன் ‘எப்போதும் பிரச்சினைகள் உள்ளன’ என்று கூறுபவர்களுக்கு, உண்மைகள் முக்கியம். தமிழ் சினிமாவில் ஒரே குழு, நடிகர்கள் மற்றும் குழுவினருடன் நான் பலமுறை பணியாற்றியுள்ளேன், எந்த மோதல்களும் இல்லை. இந்த ஒரு இயக்குனர் மட்டுமே எல்லை மீறி அவமரியாதையான கருத்துக்களை தெரிவித்தார். அவர் அதை பகிரங்கப்படுத்தத் தேர்ந்தெடுத்தார், அதற்கு பதிலளிக்க எனக்கு முழு உரிமையும் உள்ளது. நீங்கள் இன்னும் அந்த நடத்தையை ஆதரிக்க விரும்பினால், அது உங்கள் விருப்பம். அதற்காக நான் தூக்கத்தை இழக்கவில்லை. யாராவது என்னைப் பற்றி மோசமாகப் பேசத் தேர்வுசெய்தால், நான் அவர்களுக்கு உண்மையிலேயே நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.
Also Read… பராசக்தி படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் நடிகை ஸ்ரீ லீலா – வைரலாகும் வீடியோ