Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதாக வழக்கு தொடர்ந்த இளையராஜா – சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு

Music Director Ilaiyaraaja: தமிழ் சினிமா மட்டும் இன்றி உலகம் முழுவதும் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது இசையில் 10000-க்கும் மேற்பட்ட பாடல்கள் இதுவரை உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பாடல்களால் அதிகம் பேசப்பட்ட இளையராஜா தற்போது தொடர்ந்து வழக்குகள் குறித்து பேசப்பட்டு வருகிறார்.

தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதாக வழக்கு தொடர்ந்த இளையராஜா – சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு
இளையராஜாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Nov 2025 13:35 PM IST

தமிழ் சினிமாவில் வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் இளையராஜா (Music Diretor Ilaiyaraaja). இவர் அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் பாடல்கள் இசையமைத்து உள்ளார். தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் 1000ற்கும் அதிகமான படங்களில் இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது இசையில் வெளியான பாடல்களைக் கொண்டாடிய ரசிகர்கள் இவரை இசைஞானி என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். இவரது இசையில் இதுவரை 10000-க்கும் மேற்பட்ட பாடல்கள் வெளியாகி தற்போது வரை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தொடர்ந்து தான் இசையமைக்கும் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பையும் கவனத்தையும் ஈர்த்து வந்த இசையமைப்பாளர் இளையராஜா தற்போது வழக்குகளைத் தொடர்வதன் மூலம் தொடர்ந்து செய்திகளில் இடம் பிடித்து வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது இசையில் முன்னதாக வெளியான ஹிட் பாடல்களை தற்போது வெளியாகும் படங்களில் ரீ கிரியேட் செய்து ஒலிபரப்பப்பட்டது. இதில் பல இளையராஜாவிடம் அனுமதிப் பெறாமல் படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் எதிர்த்து தொடர்ந்து காப்பி ரைட்ஸ் வழக்குகளைத் தொடர்ந்து வருகின்றார்.

இளையராஜாவின் புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை:

இந்த நிலையில் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் இசையமைப்பாள இளையராஜா. அதில் தனது பாடல்களையும், புகைப்படங்களையும் அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அப்படி பயன்படுத்தியதால் இதுவரை அவர்களுக்கு வந்த வருமனத்தை கணக்கு காட்ட வேண்டும் என்றும் வழக்கைத் தொடர்ந்து இருந்தார்.

Also Read… பராசக்தி படத்திலிருந்து கியூட்டான BTS வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ரீலீலா

அதன்படி இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை 4 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… நடிகர் ஃபகத் பாசிலின் வித்யாசமான நடிப்பில் நார்த் 24 காதம் படத்தை மிஸ் செய்யாதீர்கள்