பிக்பாஸில் ஃபன் டாஸ்கில் கூட போட்டியாளர்கள் இடையே இவ்வளவு வன்மமா? வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி 45 நாட்களைக் இன்றுடன் கடந்துள்ளது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான டாஸ்க் ஜாலியாக செய்ய வேண்டும் என்று கூறியும் சண்டை போட்டுக்கொள்ளும் போட்டியாளர்கள்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 45 நாட்கள் நிறைவடைந்துள்ளது. 6 வாரங்கள் முடிவடைந்து 7-வது வாரம் தற்போது சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து சண்டைகளுக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீசன் 9 நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து ரசிகர்களிடையே நெகட்டிவ் விமர்சனங்களை கூறி வருகின்றது. இதுவரை எந்த சீசனுக்கும் இப்படி ஒரு நெகட்டிவ் விமர்சனங்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த விமர்சனங்களை மாற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவும் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி நேரடியாகவே போட்டியாளர்கள் இடையே இந்த மாதிரியான நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே வருகிறது என்று தெரிவித்து உள்ளார். ஆனால் அதையும் போட்டியாளர்கள் கருத்தில் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வீக்லி டாஸ்காக அரண்மனை டாஸ்க் வழங்கப்பட்டது. கலகலப்பாக செல்ல வேண்டிய இந்த டாஸ்க் கலேபரமானது குறித்து மக்களிடையே விமர்சனக்கள் எழுந்தது. இது குறித்து பிக்பாஸ் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் கேள்வி எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மூன்று அணிகளாக பிரிந்து போட்டியிட வேண்டும் என்று ஒரு ஃபன் டாஸ்க் ஒன்றை அளித்துள்ளார்.
ஃபன் டாஸ்கில் கூட இடையே இவ்வளவு வன்மமா?
இந்த நிலையில் இந்த டாஸ்கில் பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் என ஒவ்வொரு டீமிலும் இரண்டு நபர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள அனைவரும் அவர்களின் பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் நபர்களை தேர்ந்தெடுத்து கூறினர். இதில் விக்கல்ஸ் விக்ரமை ரம்யா ஜோ வொர்ஸ்ட் பர்ஃபாமராக கூற தொடர்ந்து பின்னே வந்த விக்கல்ஸ் விக்ரம் ரம்யா ஜோவை வொர்ஸ்ட் பர்ஃபாமராக கூறுகிறார். இதனால் ரம்யா ஜோ அழுகும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Also Read… தனுஷ் – தமிழரசன் பச்சைமுத்து கூட்டணியை உறுதி செய்த படக்குழு – வைரலாகும் பதிவு!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… பராசக்தி படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் நடிகை ஸ்ரீ லீலா – வைரலாகும் வீடியோ



