பைசன் முதல் டீசல் வரை… இந்த வீக்கெண்ட் ஓடிடியில் என்ன பார்க்கப் போறீங்க?
This Week OTT Release Update : இந்திய சினிமாவைப் பொருத்தவரை ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதுப் படங்கள் வெளியாவது வழக்கம். அதே போல ஒவ்வொரு வாரமும் ஓடிடியிலும் தொடர்ந்து புதுப்புது படங்கள் மற்றும் இணையதள தொடர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.
பைசன் காளமாடன்: தமிழ் சினிமாவில் கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பைசன் காளமாடன். ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தை பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை அனுபமா பரமெசுவரன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து பசுபதி, ரெஜிஷா விஜயன், அமீர், லால் என பலர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். கபடி வீரர் மனத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து தீபாவளி பண்டிகயை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
பைசன் காளமாடன் படத்தின் ட்ரெய்லர் இதோ:
நடு சென்டர்: ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் தற்போது நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் இணையதள தொடர் தான் நடு சென்டர். இந்த இணையதள தொடரை இயக்குநர் நரு நாராயணன் இயக்கி உள்ள நிலையில் திரைக்கதையை நரு நாராயணன், கீர்த்தி மற்றும் நிர்மல் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். மொத்தம் 17 எபிசோடுகளுடன் தயாராகும் இந்த தொடர் வாரம் வாரம் 3 என்ற விகிதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் சசிகுமார், ஆஷா ஷரத், கலையரசன் உடன் இணைந்து சூர்யா எஸ்கே, சூர்யா விஜய் சேதுபதி, சாரா பிளாக், டெரன்ஸ், முகேஷ், டோம், யஷ்வந்த், சஹானா, மதுவசந்த், ஆர்த்தி, கிஷோர், ஜீவா, நந்தகோபால், தாரா அமலா ஜோசப், மற்றும் சிவம் பல இளம் நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த தொடர்ந்து தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகின்றது.




நடு சென்டர் தொடரின் ட்ரெய்லர் இதோ:
டீசல்: தமிழ் சினிமாவில் கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் டீசல். இயக்குநர் சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கி உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் அதுல்யா ரவி, பி. சாய் குமார், வினய் ராய், கருணாஸ், விவேக் பிரசன்னா, ரிஷி ரித்விக், சச்சின் கெடேகர், ஜாகீர் உசேன், கேபிஒய் தீனா, தங்கதுரை, லொள்ளு சபா மாறன், ஜி.மாரிமுத்து ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.