பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரபல நடிகை… இணையத்தில் வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 9 : பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் தற்போது பிரபல நடிகை ஒருவர் சென்றுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களுக்கு தொடர்ந்து படக்குழு தற்போது புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பு எல்லாம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்ல பலரும் போட்டிப்போட்டுக் கொண்டு இருந்த நிலையில் தற்போது வெள்ளித்திரையில் வெளியாகும் பலப் படங்களுக்கு குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்கள் உட்பட பலப் படங்களுக்கு சின்னத்திரையில் நடைபெறும் ரியால்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தொடர்ந்து புரமோஷன் பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்கி ஒளிப்பரப்பாகும் போதும் தொடர்ந்து அந்த காலக்கட்டத்தில் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் புரமோஷன் பணிகளுக்காக படக்குழுவினர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது வழக்கமாக உள்ளது. அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பல படக்குழுவினர் பிக்பாஸ் வீட்டிற்குள் புரமோஷன் பணிகளுக்காக சென்றுக்கொண்டே இருக்கின்றனர்.
அதன்படி கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களான கவின் மற்றும் பூர்ணிமா இருவரும் அவர்களின் படங்களின் வெளியீட்டிற்காக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இன்று நடிகை கீர்த்தி சுரேஷ் என்ட்ரி கொடுத்துள்ளார். அவரது நடிப்பில் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் புரமோஷனுக்காக வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




பிக்பாஸ் வீட்டிற்குள் ரிவால்வர் ரீட்டா படத்தின் புரமோஷனுக்காக சென்ற கீர்த்தி சுரேஷ்:
இந்த நிலையில் வருகின்ற 28-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நடிகை கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. டார்க் காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஜேகே சந்துரு எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடிகர்கள் ராதிகா சரத்குமார், சுனில், ரெடின் கிங்ஸ்லி, சென்ட்ராயன், சூப்பர் சுப்பராயன், அஜய் கோஷ், ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ், சக்ரவர்த்தி, கதிரவன், சென்ட்ராயன், அகஸ்டின், பிளேட் சங்கர், ராமச்சந்திரன், அக்ஷதா அஜித், குஹாசினி, காயத்ரி ஷான் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
Also Read… சூர்யாவின் கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்ற பிரபல ஓடிடி நிறுவனம்
இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி வீடியோ:
Keerthy Suresh came for Revolver Rita movie promotion in the #BiggBossTamil9 house today, live🖤🔥
Suresh Sir (S4 & BBU1) & Sendrayan(S2) also part of this movie.#BiggBoss9Tamil
pic.twitter.com/lesQ69Drql— Ahamed Inshaf (@InshafInzz) November 25, 2025