Vijay Sethupathi: அந்த படம் எனக்கு அளவவு பெரிய வெற்றியை கொடுக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை- விஜய் சேதுபதி!
Vijay Sethupathi About 96 Movie Success:தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தெலுங்கு சினிமாவிலும் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் இவர் முன்பு பேசிய நேர்காணல் ஒன்றில், தனது படம் எதிர்பாராமல் வெற்றி பெற்றது குறித்து வெளிப்படியாக் பேசியுள்ளார். அது எந்த படம் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான படம்தான் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்த நிலையில், சவிஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menen) நடித்திருந்தார். இந்த படமானது கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் மற்றும் அதில் குடும்பம் நுழைந்தால் எவ்வாறு பிரச்னை வெடிக்கும் என்பது தொடர்பான கதைக்களத்தில் இப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தொடர்ந்த தெலுங்கி ஹீரோவாக புதிய படத்தில் நடித்துவருகிறார். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் தமிழில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்து, பின் நாயகனாக சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.
இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 50 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகனாகவே இருந்துவருகிறார். அந்த வகையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, 96 திரைப்படம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: விஜய் சாருக்கு அந்தமாதிரி கதையில் படம் எடுக்கவேண்டும் என ஆசை- நினைத்ததை சாதித்த ஹெச்.வினோத்!
பிரேம் குமாரின் 96 திரைப்படம் குறித்து ஓபனாக பேசிய விஜய் சேதுபதி :
அந்த நேர்காணலில் நடிகர் விஜய் சேதுபதி,”கமல்ஹாசன் சாரின் அன்பே சிவம் படத்தில் வரும் வசனம் போலத்தான் எனக்கு 96 திரைப்படம். இந்த திரைப்படம் எனக்கு இவ்வளவு பெரிய பேராண்மையும், பிரபலதையும் தரும் என எனக்கு நிச்சயமாக நினைத்து கூட பார்க்கவில்லை. இயக்குனர் பிரேம் குமார் எழுதிய ஸ்கிரிப்ட் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
இதையும் படிங்க: வெற்றிமாறன் ஒரு செயின் ஸ்மோக்கர்.. அந்த படத்தை தவிர்த்த காரணம் இதுதான் – ஆண்ட்ரியா ஜெரெமையா!
நான் பண்ணிய பீட்ஸா படத்திற்கு பின் நானா படித்து எனக்கு கதியாக மனதில் ஓடிய படம் என்றால் அது 96 திரைப்படம்தான். இந்த் படம் திரையரங்குகளில் நன்றாக ஓடும் என நினைத்தேன். ஆனால இந்த படம் இவ்வளவு பெரிய ஹிட் கொடுக்கும் என நான் கனவின் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த விஷயம் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இன்றுவரையிலும் என்னால் அதை நம்பமுடியவில்லை” என அதில் அவர் ஓபனாக பேசியிருந்தார்.
நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட லேட்டஸ்ட் எக்ஸ் பதிவு :
Happy to reveal the first single #Esakaaththa from @SasikumarDir’s #MyLord ❤️
🔗https://t.co/YKRHyBUjA2A beautiful track sung by @Chinmayi & @dsathyaprakash, with lyrics by @YugabhaarathiYb and music by @RSeanRoldan.
Wishing the entire team a big success🙌
A @Dir_Rajumurugan… pic.twitter.com/Os0L2REhNu
— VijaySethupathi (@VijaySethuOffl) November 19, 2025
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தெலுங்கில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பூரிசேதுபதி என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கில்லை ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்துவருகிறார். இவர் வாத்தி படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில், வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.