AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டி 55 படத்தில் இதுவரை இல்லாத புது தோற்றத்தில் நடிகை சாய் பல்லவி – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Sai Pallavi Character in Dhanush 55 Movie | தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

டி 55 படத்தில் இதுவரை இல்லாத புது தோற்றத்தில் நடிகை சாய் பல்லவி – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
சாய் பல்லவிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Jun 2026 15:58 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் நடிகை சாய் பல்லவி. அந்தப் படத்தை தொடர்ந்து வேறு எந்த படங்களிலும் நடிக்காத சாய் பல்லவி தனது படிப்பில் முழு நேரமும் கவனம் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் தனது டாக்டர் படிப்பை முடித்த நடிகை சாய் பல்லவி தொடர்ந்து சின்னத்திரையில் பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இப்படி இருந்த நிலையில் மலையாள சினிமாவில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் நடிகை சாய் பல்லவி. இதுதான் அவர் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படம் ஆகும்.

மலையாள சினிமாவில் சாய் பல்லவி நாயகியாக அறிமுகம் ஆகி இருந்தாலும் இந்த படம் தமிழ், தெலுங்கு என்று தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமானதால் தொடர்ந்து பிரபலமானார் நடிகை சாய் பல்லவி. அதன்பிறகு தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியான நடிகையாக மாறினார் இந்த நிலையில் தற்போது இந்தி மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார்.

காவல்துறை அதிகாரியாக நடிக்கும் நடிகை சாய் பல்லவி:

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நடிகை சாய் பல்லவி தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் டி 55 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிகைகள் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா என இரண்டு நாயகிகள் உள்ளனர். இதில் நடிகை சாய் பல்லவி காவல்துறை அதிகாரியாக நடித்து உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இதுவரை நடிகை சாய் பல்லவி இந்த வேடத்தில் நடித்தது இல்லை என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

Also Read… தனுஷின் 55-வது படத்தின் லுக் இதுதானா? வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… திரிஷா குறித்துவரும் சர்ச்சை.. அவர் எப்போதும் அப்படிதான் – அர்ச்சனா கல்பாத்தி பேச்சு!

Follow Us