AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திரிஷா குறித்துவரும் சர்ச்சை.. அவர் எப்போதும் அப்படிதான் – அர்ச்சனா கல்பாத்தி பேச்சு!

Archana Kalpathi About Trisha Friendship: ஏஜிஎஸ் எண்டெர்டைமென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் அர்ச்சனா கல்பாத்தி. இவர் நடிகை திரிஷாவின் நெருங்கிய தோழியும் கூட. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், நடிகை திரிஷாவுடனான நட்பு குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

திரிஷா குறித்துவரும் சர்ச்சை.. அவர் எப்போதும் அப்படிதான் – அர்ச்சனா கல்பாத்தி பேச்சு!
அர்ச்சனா கல்பாத்தி மற்றும் திரிஷாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 Jun 2026 17:44 PM IST

தமிழில் கடந்த 2024ம் ஆண்டில் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் வெளியான தி கோட் (The GOAt) என்ற படத்தை, தயாரித்து தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனம்தான் ஏஜிஎஸ் எண்டர்டைமென்ட் (AGS Entertainment). இந்த நிறுவனத்தை தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் மற்றும் அவரின் மகள்கள் இணைந்து நடத்தி வருகிறார்கள். அதில் ஒருவராக டிராகன், STR51 போன்ற படங்களை தயாரித்தவர்தான் அர்ச்சனா கல்பாத்தி (Archana Kalpathi). இவர் நடிகை திரிஷாவின் (Trisha) நெருங்கிய தோழியும் கூட. இவரும், நடிகை திரிஷாவும் பல்வேறு இடங்களுக்கு இணைந்து பயணம் மற்றும் பார்ட்டி போன்ற இடங்களுக்கு செல்வது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகும். அந்த வகையில், அர்ச்சனா கல்பாத்திதான் தற்போது தயாரிப்பாளராக ஏஜிஎஸ் எண்டர்டைமென்ட் நிறுவனத்தை நடத்திவருகிறார். இவரின் தயாரிப்பில் சமீபத்தில் அர்ஜுனின் பிளாஸ்ட் (Blast) என்ற படம் வெளியாகியிருந்தது.

இப்படமானது பெண் பிள்ளைகளின் தற்காப்பு குறித்த கதைக்களத்தில் வெளியான நிலையில், நல்ல வசூலைப் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இவர் கலந்துகொண்டிருந்தார். அதில் பேசிய அர்ச்சனா கல்பாத்தில், திரிஷா குறித்த சர்ச்சைகள் மற்றும் அவர்களின் நட்பு குறித்து விளக்கமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தாயின் மறைவிற்கு பிறகு.. கனத்த இதயத்துடன் மீண்டும் கார் ரேஸில் அஜித் – வைரலாகும் பதிவு!

திரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி:

அந்த நேர்காணலில் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ” திரிஷா திரையுலகிற்கு வெளியே என் தோழி. எனக்கு அவளை சினிமா மூலம் தெரியாது; நாங்கள் ஒரே பேட்ச். அது கல்லூரி, பள்ளிப் பருவ நட்பு. எனக்கு அவளைப் பல வருடங்களாகத் தெரியும். நாங்கள் ரொம்பவே ஜாலியான குரூப். எங்களுக்கு என்று ஒரு தனி உலகம் உண்டு, மேலும் நாங்கள் எங்கள் வேலையில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தளபதி விஜய் முதலமைச்சராக வெற்றி பெற்றது வித்தியாசமானது – பவன் கல்யாண் பேச்சு!

திரிஷா என்னை விட நீண்ட காலமாக சினிமா துறையில் இருக்கிறார். எனக்குத் தெரிந்தவர்களிலேயே அவர்தான் மிகவும் கடினமாக உழைப்பவர். கருப்பு படத்தின் வெற்றியைப் பாருங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தின் அதிக வசூல் செய்த ஒவ்வொரு படத்தையும் நீங்கள் பார்த்தால், அந்தப் படத்தில் திரிஷா இருப்பார்” என அதில் அவர் கூறியிருந்தார்.

திரிஷா குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசியது தொடர்பான பதிவு:

அர்ச்சனா கல்பாத்தியில் தயாரிப்பில் தமிழில் STR51, லவ் பைட் மற்றும் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் ஒரு படம் என கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கும் மேல் தனது கைவசத்தில் வைத்துள்ளார். இந்த படங்கானது தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாக தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us