AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஸ்வநாத் & சன்ஸ் படம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார்

Music composer GV Prakash Kumar About Vishwanath and Sons Movie Song | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.

விஸ்வநாத் & சன்ஸ் படம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார்
விஸ்வநாத் & சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Jun 2026 19:59 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து திரையரங்குகளில் கருப்பு படம் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.

இந்தப் படத்தினை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் பான் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில் விஸ்வநாத் & சன்ஸ் படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முதல் சிங்கிள் மாதம் தொடங்கியது என்று தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இந்த ஜூன் மாதம் விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வெளியாக உள்ளதாக தெரிகிறது. இது தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… பிரமாண்டமாக உருவாகும் சேயோன் படத்தின் பாடல்… வைரலாகும் தகவல்

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சிறந்த சீரியலுக்கான விருதை தட்டிச்சென்ற விஜய் டிவி.. அட இந்த சீரியலுக்குதானா?

Follow Us