Cocktail 2: ஒரே ஹீரோவை காதலிக்கும் இரு நடிகைகள்.. கலகலப்புடன் வெளியானது காக்டைல் 2 பட ட்ரெய்லர்!
Cocktail 2 Movie Trailer: பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்துவருபவர் ஷாகித் கபூர். இவரின் நடிப்பில் இந்தி மொழியில் சிறப்பாக தயாராகியுள்ள படம் காக்டைல் 2. இதில் ராஷ்மிகா மற்றும் க்ரிதி சனோன் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இதன் கலகலப்பான ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது.
இந்தி சினிமாவில் சிறப்பான நாயகனாக இருந்துவருபவர் ஷாகித் கபூர் (Shahid Kapoor). இவரின் நடிப்பில் தொடர்ந்து இந்தி மொழியில் சிறப்பான படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக “ஓ ரோமியோ” (Oh Romeo) என்ற படத்தில் நடித்திருந்தார். அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் வெளியாகியிருந்த இப்படம் இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த வரிசையில் இந்த 2026ம் ஆண்டில் அடுத்ததாக வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் காக்டைல் 2 (Cocktail 2). இதில் ஷாகித் கபூர் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) மற்றும் க்ரிதி சனோன் (Kriti Sanon) இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஹோமி அடஜானியா (Homi Adajania) இயக்கியுள்ளார்.
இவரின் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படமானது வரும் 2026 ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இது ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் வெளியாகும் 4வது இந்தி திரைப்படமாகும். அந்த வகையில் இன்று 2026 ஜூன் 02ம் தேதியில், இப்படத்தின் கலக்கல் ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது.




இதையும் படிங்க: அறம் 2 படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி… ஆனால் – தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ராஜேஷ்!
நடிகர் ஷாகித் கபூர் பகிர்ந்த காக்டைல் 2 படத்தின் ட்ரெய்லர் குறித்த எக்ஸ் பதிவு:
From friends to lovers to CHAOS, the perfect 🍸 is back. #Cocktail2 In Cinemas 19th June. Trailer Out Now.
— Maddockfilms (@MaddockFilms) June 2, 2026
காக்டைல் 2 படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:
இந்த காக்டைல் 2 படமானது ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஷாகித் கபூர், குணால் என்ற வேடத்திலும், க்ரிதி சனோன், அல்லி என்ற வேடம் மற்றும் ராஷ்மிகா மந்தனா தியா என்ற வேடத்திலும் நடித்துள்ளனர். இதில் நடிகர் ஷாகித் கபூரை இரு பெண்களும் காதலிக்கிறார்கள். மேலும் அந்த இரு பெண்களும் ஒரே நேரத்தில் ஷாகித் கபூரை திருமணம் செய்யவும் ஒத்துக்கொள்கிறார்கள்.
இதையும் படிங்க: பரிமளா & கோ படத்தை எந்த வயதினர் எல்லாம் பாக்கலாம்? சென்சார் அப்டேட் இதோ
இந்நிலையில் இந்த மூவருக்குள்ளும் நடக்கும் காதல் போராட்டம் மற்றும் அவர்களுக்கிடையே வரும் பிரச்சனைகளை மையப்படுத்திய கதைக்களம் கொண்ட படமாக காக்டைல் 2 உருவாகியுள்ளதாக இந்த ட்ரெய்லர் மூலம் தெரிகிறது. இப்படமானது வரும் 2026 ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படமானது இந்தி மொழியிலே வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படத்தின் மற்ற மொழி பாதிப்புகள் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.