பிரமாண்டமாக உருவாகும் சேயோன் படத்தின் பாடல்… வைரலாகும் தகவல்
Seyon Movie Shooting Update | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் சேயோன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் இவர் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் காமெடி நடிகராகவே நடித்து வந்தார். அதன்பிறகு நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகும் ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து காமெடி கதைகளை தேர்வு செய்தே நடித்து வந்தார். இந்த நிலையில் சமீப காலமாகதான் கதைகளுக்கு முக்கியதுவம் கொடுத்து மிகவும் ஆழமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பராசக்தி என்ற படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இந்தப் படம் வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் சேயோன். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




பிரமாண்டமாக உருவாகும் சேயோன் படத்தின் பாடல்:
அதன்படி இந்த சேயோன் படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கி வருகிறார். முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான தாய் கிழவி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த சேயோன் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் தொடங்கியுள்ளது; அங்கு படக்குழுவினர் பிரம்மாண்டமான ஒரு பாடல் காட்சியைப் படமாக்கி வருகின்றனர். இந்தப் படப்பிடிப்பில் 1,500-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர், இதுவே இப்படத்தின் மிகப்பெரிய பாடல் காட்சிகளில் ஒன்றாக அமைகிறது. இப்படத்திற்காக சந்தோஷ் நாராயணன் துடிப்பான கிராமிய நாட்டுப்புறப் பாடல் ஒன்றை இசையமைத்துள்ளார். இந்த உற்சாகம் நிறைந்த பாடல் காட்சியில் சிவகார்த்திகேயனும் பாக்கியஸ்ரீ போர்ஸும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… தனுஷிற்கு கதை கூறிய நடிகர் வெங்கட் பிரபு? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
The shooting of #Sivakarthikeyan‘s #Seyon has now commenced in Madurai, where the team is currently filming a grand song sequence.
More than 1,500 dancers are participating in the shoot, making it one of the film’s biggest song sequences. #SanthoshNarayanan has composed a… pic.twitter.com/1C5GOvQMmV
— Movie Tamil (@_MovieTamil) June 1, 2026
Also Read… லெஜெண்ட் சரவணனின் ஆக்ஷன் சூப்பரா? சுமாரா?… ஓடிடியில் வெளியாகி உள்ள லீடர் படத்தின் விமர்சனம் இதோ