AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனுஷிற்கு கதை கூறிய நடிகர் வெங்கட் பிரபு? வைரலாகும் தகவல்

Dhanush Next Movie With Venkatprabhu | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் கர என்ற படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் அடுத்ததாக தன்னுடைய 55-வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தனுஷ் இயக்குநர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனுஷிற்கு கதை கூறிய நடிகர் வெங்கட் பிரபு? வைரலாகும் தகவல்
தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jun 2026 21:39 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் தனுஷ். இவர் நாயகனாக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் அவரின் ஒல்லியான தேகத்தை வைத்தும் உருவத்தை வைத்தும் பல கேலி கிண்டல்களை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா மட்டும் இன்றி ஹாலிவுட் வரை பிரபலமனாக நடிகராக தற்போது வலம் வர பல கடின உழைப்பைப் போட்டு உள்ளார். அப்படி அவர் போட்ட கடின உழைப்புதான் தற்போது அவரை முன்னணி நடிகராக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக கர என்ற படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அடுத்தடுத்து தனுஷ் நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

தனுஷிற்கு கதை கூறிய நடிகர் வெங்கட் பிரபு?

டூரிங்க் டாக்கீஸ் யூடியுப்பின் தகவலின்படி, இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் தனுஷிற்கு கதை கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதே கதை முன்னதாக சிவகார்த்திகேயனிடம் விவரிக்கப்பட்டிருந்தது ஆனால், பட்ஜெட் தொடர்பான காரணங்களால் அத்திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்று கூறப்படுகிறது. இப்படம் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இந்த வீக்கெண்டில் ஓடிடியில் என்ன படம் பார்க்க பிளான் வச்சிருக்கீங்க?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Jason Sanjay: சிக்மா படம் என் வாழ்க்கையிலே மறக்கமுடியாத பயணம் – ஜேசன் சஞ்சய்!

Follow Us