AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிறந்த சீரியலுக்கான விருதை தட்டிச்சென்ற விஜய் டிவி.. அட இந்த சீரியலுக்குதானா?

Best Serial Award: தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபல தொலைக்காட்சியாக விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் உள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சிகளில் வெளியான சீரியல்களில் சிறந்த சீரியலுக்கான விருதை, விஜய் டிவியில் சீரியல் வென்றுள்ளது. அது எந்த சீரியல் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

சிறந்த சீரியலுக்கான விருதை தட்டிச்சென்ற விஜய் டிவி.. அட இந்த சீரியலுக்குதானா?
விஜய் டிவி சீரியல் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 02 Jun 2026 21:24 PM IST

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்கள் பல இருக்கின்றனர். அதிலும் சன் டிவி (Sun Tv) மற்றும் விஜய் டிவியில் (Vijay Tv) வெளியாகும் சீரியல்கள் மத்தியில் பெரும் போட்டியே நிலவுகிறது. இந்த இரு தொலைக்காட்சி சீரியல்களே தொடர்ந்து அதிக டிஆர்பி ரேட்டிங் (TRP Rating) பெற்றுவருகிறது. இதிலும் சன் டிவியில் டிஆர்பி ரேட்டிங் கொண்ட சீரியல்கள் அதிகம். அதே போலவே விஜய் டிவியில் வெளியாகும் சீரியல்களை டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுவருகின்றனர். விஜய் டிவியில் பிரபல சீரியல்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (Pandian Stores), சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை (Ayyanar Thunai) மற்றும் அழகே அழகு போன்ற சீரியல்கள் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. மேலும் ஒட்டுமொத்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை சீரியல் டாப் 5 இடங்களில் இடம்பெறும்.

அவ்வாறு விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த SITSA விருது விழாவில், சிறந்த சீரியலுக்கான விருதை விஜய் டிவி சீரியல் பெற்றுள்ளது. அது வேறெந்த சீரியலும் இல்லை அய்யனார் துணை சீரியல்தான்.

இதையும் படிங்க: பெத்தி படத்திலிருந்து வெளியானது மஸ்ஸா மஸ்ஸா பாடலின் லிரிக்கள் வீடியோ

SITSA விருதுவிழாவில் சிறந்த சீரியலுக்கான விருதை பெட்ரா அய்யனார் துணை சீரியல் தொடர்பான பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Vijay TV Express (@vijaytvexpresss)

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான மற்றும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் சீரியல்தான் அய்யனார் துணை. இதில் நடிகை மதுமிதா மற்றும் அரவிந்த் இருவரும் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த சீரியலானது தினந்தோறும் இரவு 8 :30 மணியளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிவருகிறது. இந்த சீரியல்தான் எப்போதும் விஜய் தொலைக்காட்சியில் அதிகம் டிஆர்பி கொண்ட சீரியலாக இருக்கிறது.

இதையும் படிங்க: என்ன அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரெடியா? புதுவிதமாக தொடங்கும் நிகழ்ச்சி!

இந்த சீரியலானது அதிக வரவேற்பை பெற்றுவரும் நிலையில், சமீபத்தில் நடந்த SITSA விருது விழாவில் சிறந்த சீரியலுக்கான பெருமையான விருதை பெற்றுள்ளது. இந்த விழாவில், மதுமிதா மற்றும் அரவிந்த் இருவரும் இணைந்து விருதை பெற்றுள்ளனர். இது தொடர்பான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

அய்யனார் துணை சீரியல் புரோமோ குறித்த இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

அய்யனார் துணை சீரியலானது கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. பரபரப்பான திருப்பங்கள் மற்றும் பேமிலி கதைக்களத்தில் வெளியாகிவருகிறது. இந்த சீரியலே கிட்டத்தட்ட பல மாதங்களாக விஜய் டிவியில் அதிகம் டிஆர்பி கொண்ட சீரியலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us