AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Priyanka Mohan: கொரிய சுற்றுலாவின் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்ட பிரியங்கா மோகன்! குவியும் வாழ்த்து!!

Priyanka Mohan As A Korea Tourism Ambassador: பிரியங்கா மோகன் சமீபத்தில் மேட் இன் கொரியா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் கொரியா மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கொரிய சுற்றுலாவின் கௌரவத் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Priyanka Mohan: கொரிய சுற்றுலாவின் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்ட பிரியங்கா மோகன்! குவியும் வாழ்த்து!!
கொரியா சுற்றுலா தூதரான பிரியங்கா மோகன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Jun 2026 21:28 PM IST

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பிரபல கதாநாயகியாக படங்களில் நடித்துவருபவர் பிரியங்கா மோகன் (Priyanka Mohan). இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம். சிவகார்த்திகேயனின் டாக்டர் (Doctor) என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில், தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார். மேலும் இவர் சமீபத்தில் தமிழ் இயக்குநர் ரா.கார்த்திக் (Ra. Karthik) இயக்கத்தில், “மேட் இன் கொரியா” (Made In Korea) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படமானது நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியிருந்த நிலையில், உலக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக கொரியா மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் கொரியா அரசு (Korean Government) இவருக்கு விருது வழங்கி கௌரவித்து.

இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக தற்போது பிரியங்கா மோகனுக்கு மிகப்பெரிய கௌரவத்தை கொரியா அரசு வழங்கியுள்ளது. நடிகை பிரியங்கா மோகன், “கொரிய சுற்றுலாவின் கௌரவத் தூதராக” நியமிக்கப்பட்டுள்ளார் (Honorary Ambassador for Korea Tourism). இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை பிரியங்கா மோகன் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நிஜமாகவே கைவிடப்பட்டதா பிரேமலு 2 ? – நஸ்லேன் கொடுத்த அதிர்ச்சி தகவல்!

கொரிய சுற்றுலாவின் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து நடிகை பிரியங்கா மோகன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த பதிவில் நடிகை பிரியங்கா மோகன், “இந்த அற்புதமான கௌரவத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். கொரிய சுற்றுலாவின் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. கொரிய கலாச்சாரத்தை இந்தியப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க உதவக்கூடிய ஒருவராக என்னை அங்கீகரித்த கொரிய அரசாங்கத்திற்கும் கொரிய சுற்றுலா அமைப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இதையும் படிங்க: ஜேசன் சஞ்சய் இணைந்து நடனமாடும் சிக்மா பட முதல் பாடல்.. ரிலீஸ் எப்போது?

கொரியாவின் கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் அதன் அன்பான உபசரிப்பு ஆகியவை எனக்கு எப்போதுமே உத்வேகம் அளிக்கிறது. இந்த அழகான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நம்பிக்கை, கருணை மற்றும் அன்பான வரவேற்பு அளித்த கொரிய சுற்றுலா அமைப்பின் தலைவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்” என அந்த பதிவில் தனது நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். தற்போது நடிகை பிரியங்கா மோகனுக்கு இப்படிப்பட்ட கௌரவம் கிடைத்த நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

Follow Us