AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sigma: ஜேசன் சஞ்சய் இணைந்து நடனமாடும் சிக்மா பட முதல் பாடல்.. ரிலீஸ் எப்போது?

Sigma Movie First Song: தமிழில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள புதிய திரைப்படம்தான் சிக்மா. இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள நிலையில், ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்நிலையில் விரைவில் வெளியாக தயாராகியுள்ள நிலையில், சிக்மா ஸ்டைல் என்ற முதல் பாடலின் புரோமோ வெளியானது.

Sigma: ஜேசன் சஞ்சய் இணைந்து நடனமாடும் சிக்மா பட முதல் பாடல்.. ரிலீஸ் எப்போது?
சிக்மா திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Jun 2026 19:22 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சந்தீப் கிஷன் (Sundeep Kishan). இவர் இறுதியாக தமிழில் தனுஷின் (Dhanush) ராயன் படத்தில், அவரின் தம்பி வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு இவர் தமிழில் நடித்துள்ள புதிய திரைப்படம்தான் சிக்மா (Sigma). இப்படத்தை முதல்வர் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) மகன் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலமாக இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகியுள்ளார். ஜேசன் சஞ்சய் இப்படத்தை இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளார். இதில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா (Faria Abdullah), ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படமானது முழுக்க ஆக்ஷன், கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கும் இசையமைப்பாளர் தமன்.எஸ் (Thaman S) இசையமைத்துள்ள நிலையில், முதல் பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நிஜமாகவே கைவிடப்பட்டதா பிரேமலு 2 ? – நஸ்லேன் கொடுத்த அதிர்ச்சி தகவல்!

சிக்மா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த தகவல்:

சந்தீப் கிஷனின் சிக்மா படத்தில் தமன் எஸ் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் முதல் பாடலாக “சிக்மா ஸ்டைல்” உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்று (01/06/2026) இதன் புரோமோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஆட்டம் ஆரம்பம்.. விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?

மேலும் இப்பாடல் வரும் 2026ம் ஆண்டு ஜூன் 4ம் தேதியில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா மற்றும் ஜேசன் சஞ்சய் இணைந்து நடனமாடியுள்ளனர். தற்போது இந்த புரோமோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறார்.

சிக்மா திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த சிக்மா படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தளபதி விஜய்யின் மகனின் படம் என்ற நிலையில், அவரின் ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்திவருகிறது முதல்வர் விஜய் சினிமாவிலிருந்து முழுமையாக வெளியேறிய நிலையில், அவரின் மகன் சினிமாவில் முதல் முதலாக அறிமுகமாகிறார். இந்நிலையில் நிச்சயம் இப்படம் வெற்றியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us