AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நண்பன் படத்தில் அந்த சின்ன வேடத்தில் நடிக்க இதுதான் காரணம் – பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ் ஓபன் டாக்

Indrans talks about Nanban movie | மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் இந்திரன்ஸ் தற்போது தென்னிந்திய சினிமாவிலும் தொடர்ந்து பிரபலமாகி வருகிறார். இந்த நிலையில வர் தற்போது தமிழ் சினிமாவில் நண்பன் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தது ஏன் என்று வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நண்பன் படத்தில் அந்த சின்ன வேடத்தில் நடிக்க இதுதான் காரணம் – பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ் ஓபன் டாக்
நண்பன் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jun 2026 12:56 PM IST

மலையாள சினிமாவில் காமெடி நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் இந்திரன்ஸ். இவர் மலையாள சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். மேலும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் உட்பட பலரின் படங்களில் அதிக அளவில் நடித்து உள்ளார். தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்த நடிகர் இந்திரன்ஸ் தற்போது பல முக்கிய வேடங்களில் ஏற்று நடித்து வருகிறார். தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டுமே பிரபலமாக இருந்து வந்த இந்திரன்ஸ் தற்போது தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகிறார். தொடர்ந்து மற்ற மொழிகளிலும் நடிகர் இந்திரன்ஸ் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கிய கருப்பு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் இந்திரன்ஸ். இந்தப் படத்தில் இவரது கதாப்பாத்திரம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் முன்னதாக இவர் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்த நண்பன் படத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்தது தற்போது இணையத்தில் வெளியாகி மக்களிடையே அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றது. அது குறித்து சமீபத்தில் நடிகர் இந்திரன்ஸ் பேசியது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நண்பன் படத்தில் அந்த சின்ன வேடத்தில் நடிக்க இதுதான் காரணம்:

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில், தான் ஏன் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்ந்தெடுத்தேன் என்பதை மூத்த மலையாள நடிகர் இந்திரன்ஸ் சமீபத்தில் வெளிப்படுத்தினார். இந்திரன்ஸின் கூறியதாவது விஜய் சார் லட்சக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த நடிகர். அவருடன் ஒரே ஒரு காட்சியில் நடித்தாலும்கூட, அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. அதேபோல, ஷங்கர் சார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகும், என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read…  

இணையத்தில் வைரலாகும் நடிகர் இந்திரன்ஸ் பேச்சு:

Also Read… என்னுடைய நடிப்பில் சிறந்த படைப்பாக வேட்டுவம் படத்தை பார்க்கிறேன் – நடிகை ஷோபிதா துலிபாலா

Follow Us