AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“நீட் தேர்வு ரத்தே நிரந்தர தீர்வு!”.. டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Delhi NEET student protest: டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் மாணவர்களின் கொந்தளிப்பான போராட்டத்தைச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை முழுமையாக ஒழிப்பது மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வாகும் எனத் தெரிவித்துள்ளார்.

“நீட் தேர்வு ரத்தே நிரந்தர தீர்வு!”.. டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
மு.க.ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 22 Jul 2026 11:25 AM IST

சென்னை, ஜூலை 22: நீட் தேர்வுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் மாணவர்கள் முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டம் இந்திய அளவிலான கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே அனைத்துச் சிக்கல்களுக்கும் நிரந்தரத் தீர்வைத் தரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவைக் கண்டித்துத் தலைநகர் டெல்லியில் மாணவர்கள் மற்றும் வாலிபர் அமைப்பினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் எம்பி அலுவலகங்கள் முன்பாகத் திரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள், மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், நீட் தேர்வை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க : மோசடி அரசியலில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.. நீட் தேர்வு நிலைபாடு இதுதான் – தவெக விளக்கம்..

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை தடியடி நடத்தியும், குண்டுக்கட்டாகத் தூக்கியும் கைது செய்து வருகிறது. மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. அதேபோல், பல்வேறு மாநிலங்களில் அரசியல் தலைவர்களும் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆரம்பத்திலேயே எச்சரித்தது திமுக தான்:

இந்நிலையில், டெல்லி மாணவர் போராட்டத்தைச் சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “புதுடெல்லியில் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நீட் தேர்வு என்பது மிகப்பெரிய முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டிலேயே முதன்முதலில் சுட்டிக்காட்டி எச்சரித்தது நாங்கள்தான். அதனால் தான், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட தொடக்கக் காலத்தில் இருந்தே திமுக அதனைத் தீவிரமாக எதிர்த்து வருகிறது; அத்தேர்வினால் வரக்கூடிய ஆபத்துகளையும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.

“தமிழகத்தின் ஒரே கோரிக்கை: நீட் ஒழிப்பு!”

சமூக நீதியை உயர்த்திப் பிடிப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடியாகத் திகழ்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மேலும் தெரிவித்துள்ளதாவது, சமூக நீதியின் பிறப்பிடம்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதலாவது திருத்தத்திற்கு வழியமைத்து, சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழும் தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே.

இதையும் படிக்க: தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது…. தவெக கடும் கண்டனம்

போராட்டத்தின் முதன்மை இலக்கு:

டெல்லியில் நடைபெறும் போராட்டங்களில் மற்ற அனைத்துக் கோரிக்கைகளையும் விட, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையே முதன்மையானதாக இருக்க வேண்டும். நீட் தேர்வை முழுமையாக ஒழித்துக்கட்டுவது ஒன்றே இத்தனை சிக்கல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே நிரந்தரத் தீர்வாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Follow Us