AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது…. தவெக கடும் கண்டனம்

நீட் முறைக்கேடுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஆளுங்கட்சியான தவெக கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!என குறிப்பிட்டுள்ளது.

தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது…. தவெக கடும் கண்டனம்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 22 Jul 2026 09:17 AM IST

சென்னை, ஜூலை 22 : டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்த நிலையில் அவர் காவல்துறையினரால் அதிரடியாக தைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் எதிர்வலைகளை எழுப்பியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆளுங்கட்சியான தவெக கண்டெனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!என குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க : மோசடி அரசியலில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.. நீட் தேர்வு நிலைபாடு இதுதான் – தவெக விளக்கம்..

தவெக கடும் கண்டனம்

 

மேலும், டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது. நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : பெரம்பூர் தொகுதியை விட்டு கொடுத்தவருக்கு வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி.. முதல்வர் விஜய் கெளவிப்பு!

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாடகர் அறிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து அவர் பேசினார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நீட் தேர்வு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முறைகேடுகளுக்கு எதிராக தில்லியில் பெருந்திரளாகப் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். போராடும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை தலைமைச் செயலகம் முன்பு நான் குரலெழுப்பினேன்.

எனவே, தமிழ்நாடு அரசு நீட் தேர்வை முழுமையாக நீக்குவதற்கான தனது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே மக்களில் ஒருவனாக எனது கோரிக்கை. இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்துப் பேசினேன். அந்தச் சந்திப்பில், மாணவர்கள் மீது வன்முறையை ஏவும் போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும் பதிவு செய்தேன் என்று தெரிவித்தார்.

 

Follow Us