AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் தலைமை மீது அதிருப்தி? தவெகவில் இருந்து விலகிய நிர்வாகிகள்.. அதிமுகவில் திடீர் சேர்க்கை!

TVK -Congress Members Joined AIADMK: தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். இதனால், விஜய் தலைமை மீது அதிருப்பதி ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் தலைமை மீது அதிருப்தி? தவெகவில் இருந்து விலகிய நிர்வாகிகள்.. அதிமுகவில் திடீர் சேர்க்கை!
அதிமுகவில் இணைந்த பிற கட்சியினர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 21 Jul 2026 19:42 PM IST

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், அதிமுகவை சேர்ந்த அதிக அளவிலான முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் அதிரடியாக அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். திமுகவுடன் நெடுங்காலம் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி கூட்டணியை முறித்துக் கொண்டு தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்தது. இந்த நிலையில், இதற்கு மாறாக, தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். இதில், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சரண், அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சேனையின் மாவட்ட துணை தலைவர் பிரேம் ஆனந்த், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆன்றனி.

அதிமுகவில் இணைந்த தவெக- காங்கிரஸ் கட்சியினர்

இதே போல,  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜெகன்ராஜ், மேல்புறம் வட்டார இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் தானியேல் சிபின் ராஜேந்திரன், விளவங்கோடு மாணவர் காங்கிரஸ் செயலாளர் அபிஜித், காங்கிரஸ் பளூகல் பேரூராட்சி முன்னாள் செயலாளர் விஜின் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மேலும் படிக்க: மாணவர்களின் புத்தகப்பை சுமை இனி குறைக்கப்படும்.. இந்த நொடி முதல் கல்வி முறை மாறுகிறது – அமைச்சர் ராஜ் மோகன்..

தவெக தலைமை மீது அதிருப்தியா

தமிழக அரசியல் களத்தில் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அந்த கட்சியில் இணைந்தும், கூட்டணி அமைத்தும் வருகின்றனர். தற்போது, இதற்கு மாறாக தமிழக வெற்றி கழகத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் அந்த கட்சியின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அங்கிருந்து விலகி அதிமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி உள்ளது.

பிற கட்சிகளில் இருந்து விலக வேண்டாம்

தமிழக வெற்றி கழகத்தில் அண்மையில் இணைந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சரான கடம்பூர் ராஜு, இந்த கட்சியில் இணைந்த மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை எனவும், பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அங்கிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைய வேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதே போல, அதிமுகவிலிருந்து விலகியவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்தால் கட்சியில் பூஜ்ஜியத்தில் இருந்து வாழ்க்கை தொடங்கும் என்று எடப்பாடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 2 மாதங்களில் 10 பேர் கைது… ஆணவத்துக்கு பாடம் புகட்டுவார்கள் – மு.க.ஸ்டாலின் கண்டனம்

Follow Us