நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி தலைமை செயலகம் முன் போராட்டம்.. பாடகர் அறிவை சந்தித்த முதலமைச்சர் விஜய்..
சென்னை தலைமைச் செயலகம் முன்பு பாடகர் அறிவு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய அவர், அங்கு போராட்டம் நடத்தினார். இதையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜூலை 21, 2026: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாடகர் அறிவு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் விஜய் அவரை சந்தித்து பேசினார். நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளும், மாணவர்களும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்:
இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தங்களது மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர். இருப்பினும், போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுச்சேரி விசிட் கன்பார்ம்.. ஜூலை 25-இல் மாஸ் எண்ட்ரி.. ஐஆர்பிஎன் படைக்கு ஜனாதிபதி விருது வழங்குகிறார்!
இந்தப் போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டுள்ளார். அதேபோல், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
தலைமை செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாடகர் அறிவு:
இதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச் செயலகம் முன்பு பாடகர் அறிவு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய அவர், அங்கு போராட்டம் நடத்தினார். இதையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: பெரம்பூர் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு.. முதலமைச்சர் விஜய்க்கு மீண்டும் நோட்டீஸ் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பின்னர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பாடகர் அறிவு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.