AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெரம்பூர் தொகுதியை விட்டு கொடுத்தவருக்கு வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி.. முதல்வர் விஜய் கெளவிப்பு!

Tamil Nadu Housing Board Chairman Appointed : தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சிவாவை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதில், விஜய்க்கு பெரம்பூர் தொகுதியை விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

பெரம்பூர் தொகுதியை விட்டு கொடுத்தவருக்கு வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி.. முதல்வர் விஜய் கெளவிப்பு!
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் நியமனம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 21 Jul 2026 20:11 PM IST

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவராக இருந்து வந்தவர் பூச்சி முருகன். இவர், கடந்த மே 5- ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இவரது ராஜினாமாவை தமிழக அரசு ஏற்றது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சிவா தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சந்தித்து வாரிய தலைவர் பதவிக்கான நியமன ஆணையை பெற்றார். தொடர்ந்து, அவருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். இதனிடையே, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் விக்கிரவாண்டி அல்லது விழுப்புரம் தொகுதியில் போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகி இருந்தது.

விஜய்க்கு பெரம்பூர் தொகுதியை விட்டுக்கொடுத்தவர் சிவா

ஆனால், முதல்வர் விஜய் சென்னை மாவட்டத்தின் பெரம்பூர் மற்றும், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக வேட்பாளர்கள் அறிமுக விழாவில் அறிவித்திருந்தார். இதற்கு முன்னதாக, பெரம்பூர் பகுதியில் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா போட்டியிட இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவதாக அறிவித்ததை தொடர்ந்து, அந்த தொகுதியை ஜோசப் விஜய்க்கு, சிவா விட்டுக் கொடுத்திருந்தார்.

மேலும் படிக்க: மாணவர்களின் புத்தகப்பை சுமை இனி குறைக்கப்படும்.. இந்த நொடி முதல் கல்வி முறை மாறுகிறது – அமைச்சர் ராஜ் மோகன்..

பெரம்பூர் தொகுதியில் வெற்றிக்கு பாடுபட்டவர்

இதற்காக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணி பணியாற்றி வந்த வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சிவாவை அழைத்து எனக்காக பெரம்பூர் தொகுதியை விட்டுக் கொடுத்தவர் இவர்தான் என்று முதல்வர் விஜய் தெரிவித்து இருந்தார். மேலும், பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றி பெறுவதற்காக சிவா தேர்தல் பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 365 000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

சிவாவை அழைத்து முதல்வர் விஜய் கெளரவிப்பு

இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர். டி. சேகரை 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்காக, பெரம்பூர் தொகுதியை விட்டுக் கொடுத்த வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சிவாவுக்கு தற்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி அளித்து முதல்வர் கௌரவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஆகஸ்ட் 5- இல் தாக்கல் செய்யப்படுகிறது தமிழக பட்ஜெட் – சட்டப் பேரவைத் தலைவர் ஜே. சி. டி.  பிரபாகர் அறிவிப்பு!

Follow Us